கடின காலத்தில் கருணை

ஷா ஆலம், ஏப்.17-

சிலாங்கூர் மாநிலத்தின் ஊராட்சி மன்றங்களுக்கு உரித்தான் வளாகத்தில் வணிகத்தளன்களை வாடகைக்கு எடுக்கும் வணிகர்கள், சிறுதொழில் வர்த்தகர்களுக்கான பிரிஹாத்தின் பொருளாதாதுதவித் தொகையான 500 சிறப்பு உதவியைப் பெறுபவர்களுக்கான வாய்ப்பை விரிவாக்க அரசு ஒப்புக் கொண்டிருப்பதாக் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

உழவர் சந்தைகள், குடில்தொழில்கள், சாவடிகள், உணவு விநியோகம்,பொதுச் சந்தைகளில் உரிமம் பெற்ற சிறு வணிகர்களுக்கு ஏற்ப சிறப்பு சலுகைகள் வழங்கப்படும் என்று மந்திரிபெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

தற்போதைய வளர்ச்சியியில், வர்த்தக உரிமம் வழங்குதல், சந்தை துணை நிலவரம், உணவு நிறுவனம் ஆகியவற்றின் கீழ் அரசு வளாகத்தில் வாடகைக்கு உரிமம் பெற்ற வர்த்தகர்கள், வணிகர்களுக்கு இதனை விரிவுபடுத்த மாநில அரசு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் 20 வரை ஒரு வருட உரிமம் செல்லுபடியாகும் வர்த்தகர்கள், வணிகர்கள் மட்டுமே இந்த உதவிக்கு தகுதியுடையவர்கள் என்றும் சிலாங்கூர் மாநில அரசின் சிறப்பு உதவி விண்ணப்பத்தை இந்த மாத இறுதியில் இருந்து ஜூன் 7 வரை நீட்டிக்க மாநில அரசும் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

இதன் மூலம் 80,000 உரிமம் பெற்ற சிறு வணிகர்கள் பயன்பெறுவர். அவர்களின் பணப்புழக்கத்தை நிர்வகிக்க உதவுவதற்காக 500 வெள்ளி ரொக்க உதவிக்கு 40 லட்சம் வெள்ளியை சிலாங்கூர் மாநில அரசு ஒதுக்கியிருக்கிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here