பெட்டாலிங் ஜெயா, ஏப்.17-
குரோனா-19 தொற்றுத்தடுப்பில் மலேசிய பாதுகாவலர்களுக்கும் பங்கு இருக்கிறது. அதனால், முன்னணியில் இருக்கும் பாதுகாப்புக் காவலர்களுக்கு 40,000 க்கும் அதிகமான முகமூடிகள் விநியோகிக்கப்படும் என்று மலேசியாவின் பாதுகாப்புச் சேவைகள் சங்கம் (PIKM) தெரிவித்துள்ளது.
அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ ரம்லி யூசுப் இதனைத் தெரிவித்தார். இதற்காக 35 மருத்துவமனைகளை சங்கம் அடையாளம் கண்டிருப்பதாகக் கூறியிருக்கிறார்.
தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள், நாடு முழுவதும் உள்ள 459 சுகாதார கிளினிக்குகளில் பாதுகாப்புக் காவலர்கள் முன்னணியில் பணியாற்றுகின்றனர்.
கோலாலம்பூர் , சிலாங்கூரில் பாதுகாப்புக் காவலர்களுக்கு முகமூடிக் கவசங்கள் கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும் என்றார் அவர்.
வியாழக்கிழமை (ஏப்ரல் 16) PIKM தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனைக் கூறினார்.

மருத்துவமனைகள் சுகாதார கிளினிக்குகளில், நோயாளிகளையும், பார்வையாளர்களையும் முதலில் சந்திப்பவர்கள் பாதுகாவலர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று ரம்லி கூறினார்.
இதனால் அவர்களும் தொற்றால் பாதிக்கப்படுவதைத் தடுக்க சரியான உடையை கொண்டிருக்க வேண்டும். முகமூடிகளை விநியோகிப்பது சங்கத்தின் முதன்மையான நடவடிக்கையாகும் என்றும் அவர் கூறினார்.
சங்கத்தில் 902 நிறுவனங்கள் உறுப்பியம் பெற்றிருக்கின்றன. அதில் பணியாற்றும் காவலர்களுக்கு முகமூடிகள் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திகொள்ளவிருப்பதாக அவர் கூறினார். அரசாங்க முன்னணியில் இருப்பவர்களுக்கு தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை விநியோகிக்க அரசாங்கம் முன்னுரிமை அளித்தாலும், அரசாங்கம் காவலர்களுக்கும் தேவையான உடைகளை வழங்கும் என்று நம்புவதாக ரம்லி நம்பினார்.
முதலில் சங்கத்தின் கோரிக்கை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது, ஆனால், நாங்கள் பிரதமரிடம் இது முறையிடப்பட்டது.
மற்ற நிறுவனங்களைப் போலவே பாதுக்காப்பு நிறுவனங்களும் இத்தகைய கடினமான காலங்களில் நிதி சிக்கல்களை எதிர்கொள்கின்றன என்பதை முன் வைத்திருப்பதாகவும் ரம்லி எடுத்துரைத்தார்.