வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் பெண்ணின் சடலம் இளைஞர் கைது

வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் பெண்ணின் சடலம்

ரொம்பின்:, ஏப். 17-

இறந்த தனது காதலியின் உடலை அப்பெண்ணின் வீட்டு கார் நிறுத்திமிடத்தில் விட்டுச் சென்ற ஐந்தாம் படிவ மாணவர் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர், மாஜிஸ்திரேட் அஜிசா அகமது முன் வாசிக்கப்பட்ட குற்றச்சாட்டில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இவர், ஏப்ரல் 12 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் ஃபெல்டா கெராத்தோங் 5 இல் உள்ள தனது வீட்டை விட்டு வெளியேறி, இங்குள்ள ஜாலான் குவந்தான்- சிரம்பான் 127 கி.மீட்டருக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தில் மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

தொற்று நோய்களைத் தடுப்பது , கட்டுப்படுத்துதல் , விதிமுறைகள் 2020 இன் விதி 3 (1) இன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது, இது, அதே ஒழுங்கு முறையின் விதி 11 (1) இன் கீழ் தண்டனைக்குரியது, அதாவது 1,000 வெள்ளியைத் தாண்டாத அபராதம் அல்லது குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னர் ஆறு சிறைத் தண்டனை எனவும் வழங்கப்படலாம்.

அரசு தரப்பு துணை வழக்கரிஞராக நூர்ஹலிமாத்துன் சாடியா அப்துல்லா ஆஜரானார்.
மாணவரைப் பிரதிநிதித்து வழக்கறிஞர் அஹ்மத் டெனியல் ரோஸ்லான் ஆஜரானார். ஒன்பது பேர் கொண்ட உடன்பிறப்புகளில் இளையவரான அவருக்கு ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஜூன் 11 ஆம் தேதி நீதிமன்றம் அவருக்கான தண்டனையை உறுதிசெய்யும்.
இங்குள்ள ஃபெல்டா கெராத்தோங் 10 இல் உள்ள அப்பெண்ணின் குடும்ப வீட்டின் கார் நிறுத்துமிடத்தில் 17 வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதிகாலை 3.30 மணியளவில், சந்தேகநபர் ,பாதிக்கப்பட்டவரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ​​செம்பனை தொழிற்சாலை ஒன்றின் அருகே சாலையின் நடுவில் கிடந்த எருமை மீது மோதி விபத்துக்குள்ளானார். இதில் அப்பெண் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

சம்பவ இடத்திலேயே இறந்ததாக நம்பப்படும் பாதிக்கப்பட்ட அப்பெண்ணின் உடலை அவரது வீட்டு கார் நிறுத்துமிடத்தில் விட்டு சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here