உத்தரவு மீறல் நான்கு நிறுவனங்கள் மூடல்

நான்கு நிறுவனங்கள் மூடல்

ஜோகூர் பாரு , ஏப் 18-

மக்கள் நடமாட்டக்கூடல் இடைவெளி கட்டுப்பாடு உத்தரவை (எம்.சி.ஓ) பின்பற்றத் தவறியதற்காக நான்கு முதலாளிகளுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதாரம் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர். வித்யானந்தன் தெரிவித்தார்.

நிறுவன முதலாளிகளிடையே ஒட்டுமொத்த இணக்கம் திருப்திகரமாக உள்ளது, இப்பகுதியில் விசாரிக்கப்பட்ட 89 பேரில் நான்கு பேர் மட்டுமே மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டைத் தவறியிருக்கின்றனர்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பாதுகாப்பு, தூய்மை விதிமுறைகளைப் பின்பற்றவும் நினைவூட்டப்பட்டனர், இதில் முகமூடிகள், கைகழுவும் திரவங்கள், கையுறைகள் வழங்குவதோடு, சமூகத் இடவெளியைக் கடைபிடிக்கும் அதே வேளையில் தண்ணீர், சோப்புடன் கைகளை கழுவுமாறும் தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தப்படவேண்டும் என்றார் அவர்.

பெறப்பட்ட புகார்களில், அதிகாரிகளிடமிருந்து அனுமதி கடிதங்கள் இல்லாமல் செயல்படும் நிறுவனங்கள், தொடர்ந்து செயல்படும் அத்தியாவசிய சேவைகளின் கீழ் வகைப்படுத்தப்படாத நிறுவனங்கள், தங்கள் தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்த நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.

புகார்களில் தங்கள் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கத் தவறிய நிறுவனங்கள், சம்பளமில்லாத விடுப்பு எடுக்க தங்கள் தொழிலாளர்களைக் கட்டாயப்படுத்திய நிறுவனங்களும் அடங்கும்..

மக்கள் நடமாட்டக் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கத் தவறும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மாநில தொழிலாளர் துறை, மாநில தொழில் பாதுகாப்பு சுகாதாரத் துறை ஆகியவற்றைக் கொண்ட சிறப்புக் குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக வித்யானந்தன் தெரிவித்தார்.

இணக்க விகிதம் ஏப்ரல் 14 அன்று 96.92 சதவீதத்திலிருந்து ஏப்ரல் 15 ஆம் தேதி 96.51 சதவீதமாகக் குறைந்துள்ளது. முன்னதாக, இணக்க விகிதம் ஏப்ரல் 13 அன்று 97.09 சதவீதத்திலிருந்து ஏப்ரல் 14 ஆம் தேதி 96.92 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here