கிள்ளான்: கோவிட்-19 தொற்று பாதிப்பினால் பி40 பிரிவினருக்கு கிள்ளான் ஶ்ரீ சுந்தரராஜ பெருமாள் ஆலயத்தின் வழி உதவிகளை வழங்கி வருகிறது என்று ஆலயத்தலைவர் சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் தெரிவித்தார். ஆலயம் வழிப்பாட்டுத் தளமாக மட்டுமல்லாமல் சமூக கூடமாக விளங்க வேண்டும் என்பதில் எப்பொழுதும் முன்னோடியாக இருந்து வருகிறது.
கோவிட்-19 தாக்கத்தினால் அமலில் இருக்கும் மக்கள் நடமாட்டத் தடை உத்தரவின் காரணமாக பி40 பிரிவினருக்கு அத்திவாசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல உதவிப் பொருட்களை ஆலயத்தின் சார்பாக வழங்கி வருகிறோம்.
பி40 பிரிவினருக்கு உதவிகள் வழங்கும் அதே வேளை கோவிட்-19 தொற்று காலக்கட்டத்திலும் அயராது பணியாற்றும் Front liner’s என்று அழைக்கப்படும் முதல் நிலை பணியாளர்களின் சேவைக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் உதவிப் பொருட்களை வழங்கியதாக சங்கரத்னா சித.ஆனந்தகிருஷ்ணன் கூறினார்.