சீன முகக்கவசங்களில் தொற்று அபாயம் சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் அம்பலம்

பெய்ஜிங், ஏப்.18-

கொரோனா தொடர்புடைய உற்பத்திப் பொருட்களை ஐரோப்பிய நாடுகள் உடனடியாக நிறுத்திக் கொண்டுள்ளன.

தரமற்ற முகக்கவசங்கள், சுவாசக் கருவிகள், கையுறைகள் போன்றவை தேவையைக் கருத்தில் கொண்டு தரமற்ற முறையில் அவசர அவசரமாக தயாரிக்கப்பட்டு வருவதால் புது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

தரத்தை மறந்து துரித கதியில் பல்வேறு தனியார் நிற்வனங்கள் தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முகக்கவசங்களில் கொரோனா தொற்று இருப்பதாக ஐரோப்பிய நாடுகள் அதனை நிராகரித்துள்ளன.

சென்ஷெங் நகரை மையமாகக் கொண்டு தயாராகும் கொரோனா பாதுகாப்பு பொருட்களில் கொரோனா தொற்று சாத்தியம் இருப்பதாகவும் சர்ச்சை சீனாவிலேயே புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

கொரோனா அவசர காலத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கும் போட்டா போட்டி சீன மருத்துவ சாதன உற்பத்தி நிறுவனங்களுக்கிடையே உருவாகியுள்ளது.

சீனாவில் தயாராகும் படுமோசமான முகக்கவசங்கள் வர்த்தக நோக்குடன் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உற்பத்தியைக் கட்டுப்படுத்த சீன அரசாங்கம் நாளுக்கொரு புதிய அமலாக்கத்தை அமல்படுத்தி வருவதும் அங்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக சவுத் சைனா மோர்னிங் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here