கோரோனா காலத்தில் கோம்பாக் வட்டாரத்தில் கொள்ளை

கோம்பாக் , ஏப்.20-

பத்துமலை வட்டாரத்தில் நிகழ்ந்த இரட்டை கொள்ளைச் சம்பவங்களில் மூன்று குளிர்சாதன யூனிட்கள், இரண்டு குளிர்சாதன கம்ப்ரசர்கள் திருடியதாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

ஓர் அலுவலகம் உடைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு கணினிகள் ,ஒரு அச்சுப்பொறி காணவில்லை என்றும் புகார் தாரர் கூறியிருந்தார்.

அதே முகவரியிலிருந்து மற்றொரு புகார்தாரர், அவரது தையல் கடையில் மூன்று குளிர்சாதன யூனிட்டுகள், இரண்டு கம்ப்ரசர்களைக் காணவில்லை என்றும் கூறியிருந்தார்.

ஏப்ரல் 16 ஆம் நாள் தாமான் தேசா பத்து போலீஸ் குழு ஒருவரைக் கைது செய்தது. இந்த வழக்கில் தொடர்புள்ளதை அவர் ஒப்புக்கொண்டார், மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர் என்று அவர் கூறினார்.

மூன்று சந்தேக நபர்களும் 30 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது விசாரணையில் தெரியன் வந்தது.கொள்ளை சம்பவத்தின் போது பயன்படுத்தப்பட்ட ஒரு லாரியை தாமான் சமுத்ரா அருகே கைப்பற்றினர் லாரி ஒரு விளையாட்டு மைதானத்தில் காணப்பட்டது, மேலும் திருடப்பட்ட பொருட்களை வைத்திருக்க பயன்படுத்தப்பட்ட இடமும் தெரியவந்தது.

ஏப்ரல் 16ஆம் தேதி, ஒரு காசாளரை முகமூடி, ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் அணுகினார். சந்தேக நபர் புகார் தாரரை மிரட்டி 7,000 வெள்ளியைத் பறித்திருக்கிறார். இதில், புகார்தாரர் காயமடையவில்லை.

மேலும், வழக்குகள் தொடர்பான தகவல்கள் உள்ளவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் ஜெகததீஸ்வர் 010- 967 1818 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று போலீஸ் அறிவித்திருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here