வாஷிங்டன்,ஏப்ரல் 22-
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனாவின் உகான் நகரில் தோன்றி மற்ற நாடுகளுக்கு பரவியது. எனினும், அந்நகரில் பாதிப்பு குறைந்து இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். ஆனால் வல்லரசு நாடு என அறியப்படும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை பிற நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு முன்னணியில் உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 45 ஆயிரத்து 318 பேர் பலியாகி உள்ளனர். இது கடந்த ஒரு வார காலத்தில் இரட்டிப்படைந்து உள்ளது. இதுவரை 8 லட்சத்து 18 ஆயிரத்து 744 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 82 ஆயிரத்து 923 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர்.
இவர்களில் நியூயார்க் நகரில் 2 லட்சத்து 56 ஆயிரத்து 555 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. நியூஜெர்சியில் 92 ஆயிரத்து 387 பேர் பாதிப்படைந்து உள்ளனர்.
நியூயார்க் நகரில் 19 ஆயிரத்து 693 பேரும், நியூஜெர்சியில் 4 ஆயிரத்து 753 பேரும் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் 12 நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை 20 ஆயிரத்தினை கடந்து உள்ளது. இதேபோன்று 5 நகரங்கள், 10 ஆயிரம் முதல் 20 ஆயிரத்திற்கு உட்பட்ட பாதிப்படைந்தோர் எண்ணிக்கையை கொண்டுள்ளன.