கூச்சிங், ஏரப் .22-
சரவாக்கில் கொரோனா தொற்றியபோது நோயாளிகளுக்கு ஒரு தற்காலிக மருத்துவமனை மாநிலத்தில் கட்டப்பட வேண்டும் என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது என்று துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் உகா எம்பாஸ் கூறினார்.
இது, இதற்கு முன் யாரும் நடந்து செல்லாத சாலை. (நோயை எதிர்த்துப் போராடுவதில்) வெற்றி பெற்ற பிற நாடுகளின் அனுபவங்களையும் திட்டங்களையும் ஊனர்ந்து கொண்டதன் விளைவு என்றே கருதுகிறோம் என்றார் அவர்.
போதுமான மருத்துவமனை படுக்கைகந்த் தயாரிப்பது தான் நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.
கோலாலம்பூரில் மிகச் சிறந்த வேலை நடந்திருக்கிறது, மலேசியா அக்ரோ எக்ஸ்போசிஷன் பூங்காவில் ஒரு தற்காலிக மருத்துவமனையை அமைத்துள்ளது, நாங்களும் அதுபோலவே கூச்சிங்கில் ஒன்றைக் கொண்டிருக்க திட்டமிட்டுள்ளோம், என்று அவர் நேற்று இங்கு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், பேக்கிங் பொருட்கள், வீட்டு பிளாஸ்டிக் பொருட்கள் , அலங்காரப் பொருட்களை விற்கும் கடைகளை புதன்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வாரத்தில் இரண்டு முறை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை திறப்பதற்கு அனுமதிக்க குழு ஒப்புக் கொண்டுள்ளது என்று மாநில பேரிடர் மேலாண்மைக் குழுத் தலைவரான உகா தெரிவித்துள்லார்.
கவாய் , ஹரி ராயா கொண்டாட்டங்களுக்கான தயாரிப்புகளை இல்லத்தரசிகள் செய்ய இது உதவும் என்பது அவரின் கருதாக இருந்தது.
இருப்பினும், சலவைச் சேவைகள் மக்கல நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் போது (எம்.சி.ஓ) செயல்பட அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில், கோவிட் -19 தொற்றுநோயைத் தடுக்க மாநிலத்தில் உள்ள 138,183 வெளிநாட்டுத் தொழிலாளர்களின் நலன், ஆரோக்கியம் கண்காணிக்கப்படும் என்று டத்தோ டக்ளஸ் உகா எம்பாஸ் தெரிவித்தார்.