நோன்பினை கடைபிடியுங்கள் – கொண்டாடங்களை ஒத்தி வையுங்கள்

கோலாலம்பூர்: எம்.சி.ஓ  வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்கும் வரை, மலேசியர்கள் வரவிருக்கும் ஹரிராயா நோன்பினை கடைபிடியுங்கள் – ஆனால்  கொண்டாடங்களை  ஒத்தி வைக்குமாறு சமய விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ சுல்கிஃப்லி முகமட் அல்-பக்ரி  வேண்டுகோள் விடுத்தார்.  ஹரி ராயா தொழுகையும் உணவும் தொடரக்கூடும் ஆனால் தொடர்ந்து நடைபெறும் கொண்டாடங்களை தற்போது  நிறுத்தப்பட்டால் நல்லது என்று கூறினார்

“எம்.சி.ஓ காரணமாக கொண்டாட்டங்களை மற்றொரு நேரத்திற்கு ஒத்திவைக்க முடியுமா என்பது குறித்து சமயத் தலைவர்களின் கருத்துக்களைப் பெற்ற பின்னர் தேசிய ஃபத்வா கவுன்சிலில் இந்த சாத்தியத்தைப் பற்றி விவாதிக்க முடியும்,” என்று அவர் மேலும் கூறினார். அண்டை நாடான இந்தோனேசியா ஹரிராயா பொதுவிடுமுறையை டிசம்பர் 28ஆம் தேதி முதல் 31ஆம் தேதி என அறிவித்திருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here