சிப்பாங், ஏப்.22-
எல்.பி.ஜி எரிவாயு கொள்கலனை 28 வெள்ளிக்கு உயர்த்தி விற்ற கடை உரிமையாளர் ஒருவருக்கு ஆயிரம் வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.
26 வெள்ளி 60 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட வேண்டிய 14 கிலோ எடை கொண்ட எரிவாயு கொள்கலனை கடை உரிமையாளர்
28 வெள்ளிக்கு விற்றார்.
எரிவாயு கொள்கலன் மீது விலைப்பட்டியலை வைக்காத குற்றத்திற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என சிலாங்கூர் மாநில பயனீட்டாளர் விவகாரப் பிரிவின் தலைவர் முகமட் சிக்ரில் அஸான் அப்துல்லா தெரிவித்தார்.
கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களுக்கு அரசாங்கம் நிர்ணயித்துள்ள விலையை வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும் எனவும் சிக்ரில் கேட்டுக் கொண்டார்.