கொரோனாவுக்கு ஜெர்மனியில் தடுப்பூசி – பரிசோதனைக்கு அனுமதி

பெர்லின்,ஏப்ரல் 23-

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இந்தியா, அமெரிக்கா, சீனா என பல நாடுகளும் போட்டி போட்டு வருகின்றன.

இந்தநிலையில் ஜெர்மனியில், அந்த நாட்டின் பயோன்டெக் மற்றும் அமெரிக்காவின் பைஸர் நிறுவனங்கள் இணைந்து கூட்டாக ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன.

இந்த தடுப்பூசியை (ஆர்.என்.ஏ. தடுப்பூசி) மருத்துவ ரீதியில் பரிசோதிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த அனுமதியை ஜெர்மனியின் ஒழுங்குமுறை அமைப்பு தி பால் என்ரிச் இன்ஸ்டிடியூட் அளித்துள்ளதாக பெர்லினில் இருந்து வருகிற தகவல்கள் கூறுகின்றன.

இந்த தடுப்பூசியினால் ஏற்படக்கூடிய இடர்பாடுகள், பலன்கள், சுய விவரம் அனைத்தையும் பரிசீலித்துதான் அனுமதி தந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி, இப்போதே எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தத் தொடங்கி உள்ள

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here