பெட்டாலிங் ஜெயா, ஏப். 23-
மக்கள் ந்டமாட்ட கூடல் இடைவெளி ஆணை முடிவுக்கு வந்தவுடன் சட்ட மாணவர்கள் தங்கள் தேர்வுக்கு அதிக நேரம் ஒதுக்கப்படுவதை பரிசீலிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சான்றிதழ் சட்ட பயிற்சிக்காக இந்த ஆண்டு (சி.எல்.பி) தேர்வுக்கு அமர்ந்திருக்கும் கத்ரேசன் ஜெயராமன் மாணவர்கள் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள இரண்டு முதல் மூன்று மாத வகுப்பறைக் கற்றல் தேவைப்படும் என்றார்.
மாணவர்கள், வகுப்புக்குத் திரும்புவதற்கு மக்கள் நடமாட்ட கட்டுப்பாடு விரைவில் தளர்த்தப்படாவிட்டால், அவர்கள் தேர்வுகளுக்குத் தயாராவதற்கு போதுமான நேரம் இருக்காது என்று அவர் கவலை தெரிவித்தார்.
இந்த ஆண்டு சி.எல்.பி தேர்வு ஜூலை மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.
மக்கள் நடமாட்ட கட்டுப்பாபாடு நீக்கப்பட்டவுடன் சட்டத் தொழில் தகுதி வாரியம் ஒரு முடிவை எடுக்கும் என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுகள் மிகவும் பொருத்தமான தேதிக்கு ஒத்திவைக்கப்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.
ஆன்லைன் கற்றல் வகுப்பறை கற்றலுக்கு நல்ல மாற்றாக இல்லை என்று கதிரேசன் கூறினார்.