கோலாலம்பூர்:
GISBH எனப்படும் குளோபல் இக்வான் சர்வீசஸ், பிஸ்னஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) நசிருடின் அலி, அவரின் மனைவி உட்பட உயர் நிர்வாக அதிகாரிகள் ஆகியோரை போலீஸ் நேற்று கைது செய்தது.
புக்கிட் அமான் சிஐடி இலாகா, ஒரு சிறப்பு நடவடிக்கையின் கீழ் சில பகுதிகளில் நடத்திய சோதனையில் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
தலைமை செயல் அதிகாரியின் இரண்டு பிள்ளைகள், அல்-அர்காம் முன்னாள் தலைவர் அஷாரி முகமட்டின் பிள்ளை ஆகியோர் பிடிபட்டவர்களில் அடங்குவர்.
இவர்கள் கைது செய்யப்பட்டதை ஐஜிபி டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசேன் உறுதிபடுத்தினார்.








