நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் அருந்தலாம்: தமிழக அரசு

சென்னை,ஏப்ரல் 23-

பொதுமக்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் குடிக்கலாம் என தமிழக அரசு கூறியுள்ளது.

இதற்காக பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் திட்டமான ‘ஆரோக்கியம்’ என்ற சிறப்புத் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் தொடங்கி வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஊழியர்கள் மற்றும் போலீஸாருக்கு முதல்வர் பழனிசாமி கபசுர குடிநீரை வழங்கினார்.

கொரோனாவை தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நிலவேம்பு, கபசுரக் குடிநீரை மக்கள் குடிக்கலாம் நிலவேம்பு, கபசுரக் குடிநீர் கொரோனாவுக்கான மருந்து அல்ல; எதிர்ப்பு சதிக்காக மட்டுமே என்று தமிழக அரசு விளக்கியுள்ளது.

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கபசுரக் குடிநீர் சூரணப்பொட்டலங்கள் வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here