கோலாலம்பூர், ஏப்.23-
சிலரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அர்த்தம் இருக்கும்.அப்படியிருந்தால் அந்நாள் இனிய நாளாக இருக்கும். அந்த வகையில் ஏப்ரல் 21 ஆம் நாள் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தனது 57 ஆவது பிறந்த நாளான ஏப்ரல் 21 ஆம் நாளை ஒருபோதும் மறக்க மாட்டார்.
டாக்டர் நூர் ஹிஷாம், பிறந்த நாள் எப்போதும் அவருக்கு மறக்கமுடியாததாகவே அமைந்ட்துவிட்டது. மதம் இனத்திற்கு அப்பால் மலேசியர்களால் அவருக்கு கிடைத்த அனைத்து பெருமைகளும் மற்க்கமுடியாதாத சரித்திரம்.
பிறந்தநாள் வாழ்த்துகளளுக்கும் சிந்தனைமிக்க செய்திகளுக்கும் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். உண்மையில், இது எனக்கு நிறைய வாழ்நாளில் மறக்கமுடியாத பிறந்த நாள் என்று அவர் நேற்று இரவு ட்வீட் மூலம் கூரியிருந்தார்.
அவரது வழக்கமான் முறையில் டாக்டர் நூர் ஹிஷாம் இதனைக் கூறினார்: மலேசியர்களே, நன்றி, நாம் அனைவரும் தொடர்ந்து போராடி வெல்வோம் (கோவிட் -19 தொற்றில் பாதுகாப்பாக இருங்கள், வீட்டிலேயே இருங்கள் என்றார் அவர்.
பிறந்த நாளைக் கொண்டாடிய டாக்டர் நூர் ஹிஷாமுக்கு ஆயிரக்கணக்கான நெட்டிசன்கள் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை அனுப்பினர்.
ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் முன்னணியில் உள்ள சுகாதாரத்துறை தலைவருக்கான பிரார்த்தனைகளால் நிரம்பி வழிந்தன.
பெரும் போராட்டத்டின் நடுவே பிறந்த நாள் என்பதை மறைக்கமுடியாது. டுன்பத்திலும் இன்பமான நிகழ்ச்சி என்றாலும் கடமைக்கான முயற்சியாக இதை எடுத்துக்கொள்ளலாம் என்ரார் அவர்.