ஜொகூர் பாரு, ஏப்.24-
ரமலான் மாதத்தில் இணைந்து சேவை முன்னணியாளர்களுக்கு நோன்புக் கஞ்சியை விநியோகிக்க வேண்டும் என்று ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் கூறினார்.
தனது பணிசார்ந்த முக நூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சுல்தான் இப்ராஹிம், சாலைத் தடைகளில் கடமையில் இருக்கும் போலீஸ்காரர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் பாரம்பரிய உணவு விநியோகிக்கப்படும் என்றார்.
இன்று, நான் சமைக்கும் நோன்புக்கஞ்சி இந்த ரமலானின் போது இடங்களில் சாலைத் தடுப்புச் சோதனைகளில் நிறுத்தப்பட்டுள்ளவர்கள் உட்பட அனைத்து முன்னணி வீரர்களுக்கும் நாங்கள் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.
நோன்புக் கஞ்சியைகஞ்சியை நானே சமைப்பேன், அது நன்றாக ருசிக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் ஜோகூர் அரண்மனைச் செய்தி அலுவலகம் மூலம் ஜோகூர் அரண்மனை பமுக நூல் பதிவில் கூறினார்.
அந்த இடுகையின் படி, அவரது துணைவியார் ராஜா ஜரித் சோபியா சுல்தான் இத்ரிஸ் ஷாவுடன் வந்த ஆட்சியாளர் இங்குள்ள இஸ்தானா பாசீர் பெலாங்கியில் கஞ்சி சமைக்க கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் செலவிட்டார்.