ஈப்போ: முவாலிம் அருகே வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 384.5 கிலோ மீட்டரில் என்ற நான்கு லோரிகள் மோதிய விபத்தில் இந்தியர் ஒருவர் மரணமடைந்தார். விபத்தில் மரணமடைந்தவர் பி. கோவிந்தசாமி, (வயது 40) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
விபத்தில் சிக்கிய மற்றொரு லோரி ஓட்டுநரை காப்பாற்ற சென்றபோது கோவிந்தசாமி மரணமடைந்துள்ளார். வியாழக்கிழமை (ஏப்ரல் 23) இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக முவாலிம் ஓசிபிடி சுப்லி சுலிஸ்மி அஃபெண்டி சுலைமான் தெரிவித்தார்.
ஈப்போவிலிருந்து நான்கு லோரிகளும் கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்தன என்றார். ஆரம்ப கட்ட விசாரணையில் ஒரு லோரி டிரைவர் தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை சாலை தடுப்புக் கம்பியை மோதி விபத்துக்குள்ளானார்.
லோரி பாதையின் இடது பக்கத்தில் ஒரு குறுக்கு நிலையில் நிறுத்தப்பட்டதால் பின்னர் மற்றொரு லோரி டிரைவரான (கோவிந்தசாமி) விபத்தில் சிக்கிய டிரைவருக்கு உதவ அவசர பாதையில் நிறுத்தினார் என்று அவர் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 24) கூறினார்.
மூன்றாவது லோரி பின்னர் நிறுத்தப்பட்ட லோரியின் பின்புறத்தில் மோதியதால் அதிவேக நெடுஞ்சாலையின் நடுவில் சுழன்று நிறுத்தியது என்றார். சில நிமிடங்களுக்குப் பிறகு, சரியான நேரத்தில் நிறுத்த முடியாத நான்காவது லோரி விபத்துக்குள்ளாகி இருந்த லோரிகளை மோதியது. இதனால் கோவிந்தசாமி லோரியின் அடியில் மாட்டி மரணமடைந்தார்.
முதலில் சறுக்கிய லோரியின் 33 வயதான டிரைவர் சிறிய காயங்களுக்கு உள்ளானார். அதே நேரத்தில் 25 மற்றும் 45 வயதுடைய மற்ற இரு ஓட்டுநர்களும் காயமின்றி தப்பினர். சாலை போக்குவரத்து சட்டம் 1987 இன் பிரிவு 41 (1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார்.