இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 26,496 ஆக அதிகரிப்பு

ஆனாலும், கொரோனா தொற்று அறிகுறியுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களுக்கு அடுத்தடுத்து நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவதால் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் 26 ஆயிரத்தை தாண்டியுள்ளது என மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 26 ஆயிரத்து 496 ஆக அதிகரித்துள்ளது.  மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,804 ஆக உள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் பலியானோர் எண்ணிக்கை 824 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை1990 ஆக உள்ளது. கொரோனாவால் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here