நீரில் மூழ்கிய ஏழு வயது சிறுவனின் உடல் மீட்பு

சிபு: ஏப்ரல் 23 ஆம் தேதி கனோவிட்  என்ஜெமா நங்கா ஜாகவு ஆற்றில் தாத்தா பாட்டிகளுடன் குளிக்கும்போது அடித்துச் செல்லப்பட்ட ஏழு வயது சிறுவனின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

கனோவிட் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைத் தலைவர் அர்ரஹ்மான் சிக், நெக்சன் டானா ரெய்ன்மண்ட் என அடையாளம் காணப்பட்டவரின் உடல் இன்று (ஏப்ரல் 26) காலை 8.45 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

அவர் காணாமல் போன இடத்திலிருந்து 3 கி.மீ தூரத்தில் அவரது உடல் ஆற்றில் மிதப்பதை அப்பகுதியில் வசிப்பவர்கள் கண்டனர்.

உடல் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டு குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காண  உறவினர்களுக்கு அனுப்பப்பட்டது  என்று அர்ரஹ்மான் கூறினார். இந்த விவகாரம் மேலும் நடவடிக்கைகளுக்காக கனோவிட் போலீசாரிடம் பரிந்துரைக்கப்பட்டது.

ஏப்ரல் 23ஆம் தேதி சிறுவன் தனது தாத்தா பாட்டிகளுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது, மாலை 4.30 மணியளவில், அவரது பாட்டி தனது ஆடைகளை மாற்றுவதற்காக ஆற்றங்கரைக்குச் சென்ற நேரம் வலுவான நீரோட்டத்தால் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டான்.

தாத்தா பாட்டி உதவி பெற தங்களின்  நீண்ட குடியிருப்பு திரும்பி ஓடினார், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை  எல்லோரும் மூன்று  படகுகளைப் பயன்படுத்தி தீவிர தேடல் நடத்தினர், ஆனால் அவர்கள் சிறுவனைக் கண்டுபிடிக்க இயலாமல் போனது.

மக்கள் நடமாட்டக்  கட்டுப்பாட்டு  உத்தரவை மீறுவதாக அவர்கள் அஞ்சியதால் சிறுவனின் பெற்றோரும்  அப்பகுதி தலைவரும் ஆரம்பத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை மற்றும் காவல்துறையினரின் உதவியை நாடவில்லை என்று அர்ரஹ்மான் கூறினார்.

இருப்பினும் அக்குடியிருப்புத் தலைவருடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, சிறுவனைத் தேடுவதற்காக ஒரு தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here