கோலாலம்பூர்: மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையை (எம்.சி.ஓ) மீறியதாகக் கூறப்படும் வழக்கில் டத்தோ நூருல்ஹிடாயா அஹ்மத் ஜாஹிட் ,அவர்தம் கணவர் மீது போலீசார் விசாரிக்கத் தொடங்கியிருக்கின்றனர்.
இவ்விருவரின் வாக்குமூலங்களை காவல்துறையினர் நேற்று பதிவு செய்துள்ளதாகவும் விசாரணைகள் முடிந்ததும் இவ்வழக்கு சட்டத்துறைக்கு அனுப்பப்படும் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோ ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமை (20.4.2020) 41 வயதான நூருல்ஹிடாயா, தன்னையும் தம் கணவரையும் இரண்டு பிரமுகர்கள் சந்தித்ததைப் பார்வையிட்ட சில படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
உயிருக்கு ஆபத்தான தொற்று நோயை பரப்ப வாய்ப்புள்ள்ளதை அலட்சியம் செய்ததன் காரணமாகவும் மக்கள் நடமாட்ட்ச கூடல் இடைவெளிக் கட்டுப்பாடுகளை புறக்கணித்ததாகவும் கூறப்படும் இவ்வழக்கு தொடர்பாக வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக ஹுசிர் கூறினார்.
அவர்கள் இருவரும் குற்றம் செய்ததாகக் கண்டறியப்பட்டால் யாரும் சட்டத்திலிருந்து விடுபட மாட்டார்கள் என்றார் அவர். இதற்கிடையில், எபிட் லூ என்பவரும் புக்கிட் அமானுக்கு வரவழைக்கப்பட்ட விவகாரத்தில், சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்ட அவரது தொண்டு நடவடிக்கைகள் குறித்து, விளக்கமளிக்க அவர் அழைக்கப்பட்டதாக ஹுசிர் மேலும் கூறினார்.
பாதுகாப்பு, பொது ஒழுங்கை பராமரிக்க தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு சிலர் கட்டாயப்படுத்திவருகின்றனர் என்று அவர் கூறினார். சுகாதார அமைச்சகம், சமூக நலத் துறை வகுத்துள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க, நடமாட்டக்கட்டுப்பாடு ஆணையின்போது அதிகமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கான் தேவைகளை வழங்க அனுமதி அளித்ததாக ஹுசீர் கூறுகிறார்.
நேற்று, எபிட் லூ ஒரு பேஸ்புக் இடுகை இட்டிருந்தார். இதன் மூலம், இந்த விவகாரம் தொடர்பாக ஓர்அறிக்கையை வழங்க அழைக்கப்பட்ட பின்னர், வாய்ய்பபற்ற மக்களுக்கு உதவி வழங்குவதில் இனி நேரடியாக ஈடுபட மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.