என் நேரத்தை வீணடிக்கின்றனர் – பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிறுத்த திட்டமிடும் டிரம்ப்

கடந்த சில  நாட்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசிய கருத்துகள் தவறாக மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கப்பட்டதாகவும், எனவே அவர் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா குறித்து பல கருத்துகளை அடிக்கடி கூறிவந்தார். அதில், ஒன்று கிருமிநாசினியை கொரோனா நோயாளிகளுக்கு மருந்தாக அளிக்காலம். மற்றொன்று, ஒளியை உடலில், செலுத்தி கொரோனாவை கொல்லலாம். இது தவிர பல கருத்துகள் வெளியிட்டு சர்ச்சையை ஏற்பட்டுத்தினார்.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள டுடிவிட்டர் பதிவில், தினமும், வெள்ளைமாளிகையில், செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து என்ன பலன் இருக்கிறது. செய்தியாளர்கள் விரோதமான கேள்விகளையே முன்வைக்கின்றனர். அவர்களுக்கு முழு தகவல்களையும் விவரிக்கிறேன்.

ஆனால், செய்தியாளர்கள் மூலம் அமெரிக்க மக்களுக்கு போலி செய்தி மட்டுமே கிடைக்கிறது. இதனால், என்னுடைய முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றது.நான் முன்னர் தெரிவித்த கிருமிநாசினி குறித்த கருத்து கிண்டலாக கூறியதாகவும், நான் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு மாதங்களில், வெள்ளைமாளிகை பத்திரிகையாளர்கள் சந்திப்பு கிட்டதட்ட 50 முறை நடைபெற்றுள்ளது. பெரும்பாலும், டிரம்ப் செய்தி நிறுவனங்களில், தன்னை மய்யப்படுத்தும் அளவில் செய்திகள் வழங்குகிறார். தற்போதுவரை அமெரிக்காவில் கொரோனாவால், 53,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here