லங்காவியில் படிக்கும் மாணவர்கள் வீடு நோக்கிப் பயணம் !

லங்காவி, ஏப்.27-

லங்காவி சுற்றுலா அகாடமியின் 17 மாணவர்களில் பெரும்பாலானோரின் உணர்வு இதுதான். வீட்டிற்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்பதுதான் . அது நிறைவேறியிருக்கிறது.

மார்ச் 18ஆம் நாளில் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணை (எம்.சி.ஓ) அமல்படுத்தப்பட்டதிலிருந்து மாணவர்கள் லங்காவியிலேயே தங்க வேண்டியதாயிற்று அவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

சமையல் கலைகளில் சான்றிதழ் எடுத்துக்கொண்டிருக்கும் 20 வயதான நூருல் எசெட்டி சியாஹிரா முகமட் அத்தான், இது தான் காத்திருக்கும் செய்தி என்றும், சபா சண்டகானில் உள்ள அவரது பெற்றோர்களும் இது குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறினார்.

செமஸ்டர் இடைவேளைக்காக ஏப்ரல் தொடக்கத்தில் வீடு திரும்ப திட்டமிட்டிருந்தேன், ஆனால், கட்டுப்பாட்டு ஆணயின் காரணமாக, எனது திட்டங்கள் ரத்து செய்யப்பட்டன என்று இரு உடன்பிறப்புகளில் மூத்தவரான அவர் கூறினார்.

மக்கள் நடமாட்டக் கூடல் இடைவெளி தொடங்கியதிலிருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் தனது பெற்றோர்,  பிற குடும்ப உறுப்பினர்களை அழைத்துப் பேசுவதாகவும் தெரிவித்தார்.

வீட்டிற்குச் செல்வதில் உற்சாகமும் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் 20 வயதான நூர் உம்மி ஆயிஷா இஸ்மாயில், பினாங்கு நகரில் பாகன் ஆஜம் திரும்புவததற்குத் தயார்படுத்திக்கொள்கிறார்.

லங்காவி சுற்றுலா அகாடமியில் சமையல் கலைகளை மேற்கொண்டு வரும் நிக் முஹம்மது முகமட் நோர்சிஹா, குவந்தானில் உள்ள தனது சொந்த ஊருக்கு திரும்புவதற்கான மும்முரத்தில் இருந்தார்.

​​எனது தொழில்துறை பயிற்சி அறிக்கையை முடிக்க லங்காவியில் தங்க முடிவு செய்தேன்.

இப்போது அது முடிந்துவிட்டது, எங்கள் குடும்பங்களுடன் இருக்க எங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப அரசாங்கம் அனுமதித்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்றார்.

எங்கள் பயணம் இங்கே ஒரு விரிவுரையாளரின் உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினர்.

புதன்கிழமை குவா பயணிகள் படகு முனையத்திலிருந்து கோலா பெர்லிஸுக்கும், பின்னர் ஆராவில் உள்ள கேடிஎம் நிலையத்திலிருந்து பட்டர்வொர்த்திற்கும் படகு மூலம் வீடு திரும்புவேன், என்று அவர் மேலும் கூறினார்.

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி காலகட்டத்தில், வளாகத்தில் உள்ள மாணவர்களின் நலன், வளாகத்திற்கு வெளியே, எல்லா நேரங்களிலும் கண்காணிக்கப்படுகிறது.

லங்காவி சுற்றுலா அகாடமியின் விரிவுரையாளர்கள் ஊழியர்கள் @ கோலேஜ் கொமுனிட்டி லங்காவி மாணவர்களுக்கு தினசரி அத்தியாவசிய பொருட்களை வாங்க 3,000 வெள்ளிக்கும் அதிகமான நிதியும் திரட்டினர்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here