கொரோனா கச்சேரியில் டிங்கியும் ஒத்து ஊதுகிறது

tenku fever

கொரோனா ஒருபக்கம் அசுரத்தனம் செய்கிறது. மறுபக்கம் டிங்கித் தொற்று குரல்வலையை நெறிக்கிறது. இரண்டுக்கும் நடுவே மனிதர்கள் மன்றாடிக்கொண்டிருக்கிறார்கள். இது தான் இன்றைய நிலை என்பதல்ல,

பன்றிக் காய்ச்சல், ஸிக்கா, சிக்குன்குனனியா என்றெல்லாம் மக்களை அச்சுறுத்தி கயிறிழுப்பு நடந்துகொண்டிருக்கும் இச்சமயத்தில்தான் கொரோனா தொற்று அனுமதியின்றி நுழைந்து சுய ராஜ்ஜியம் நடத்துகிறது.

2020 இல் நாட்டைமுன்னேற்றகரமாக மாற்ற வேண்டும் என்பது பத்தாண்டுகளின் கனவாக பேசப்பட்டது. 2020 வந்தது முன்னேற்றம் வரவே இல்லை. அது, துன் டாக்டர் மகாதீர் காலம். பத்தாண்டுகள் நெருங்கியவுடன் அவகாசம் போதவில்லை. ஒத்திப் போடப்படுவதாகவும் செய்தி வந்தது.

இதில், ஒத்திப்போடுவதற்குப் பல காரணங்களை சொன்னார்கள். அந்தக் காரணங்கள் விழுங்கப்பட்டு  கொரோனா வை விடையாகத் தந்திருக்கிறது.

உலகில் எதை வேண்டுமானாலும் ஒத்திப்போடலாம். மரணத்தைக்கூட சுவாசக் கருவிகளால் ஒத்திப்போடலாம். கொரோனாவாகட்டும், டிங்கியாக  இருக்கட்டும் பன்றிக்காய்ச்சலாக இருக்கட்டும், ஸிக்காவாக இருக்கட்டும். ஒத்திப்போட முடியாது. இதில், டிங்கி உயிர்க்கொல்லி என்றாலும் மக்கள் பயப்படவில்லை. ஆனாலும் அலட்சியம் அதிகம் இருந்தது. அதனால்தான் ஏப்ரல் மாதம் 25 ஆம் நாள் வரை 39,002 எண்ணிக்கையில் டிங்கி குடும்பம் ரோஹிங்கியர்கள் போல் இடம் கேட்கிறது.

டிங்கி நோயால் இறப்பு ஏப்ரல் 19 முதல் 25 வரை ஒன்று எண்ணிக்கையில் இருந்தது என்றும் இதுவரை 64 என்றும் சுகாதாரத்துறை தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டில் இது 67 ஆக இருந்தது. சிலாங்கூர் மாநிலத்தில் டிங்கி எண்ணிக்கை 23,402 ஆக இருக்கின்றன.

டிங்கி மவுனமாக மரணத்தை ஏற்படுத்த முயன்று தோற்றுப்போனது, அனாலும் அதன் வளர்ச்சி  இந்த ஆண்டுடன்  17 வாரத்தில் 1301 என்றாகி, இந்த வாரத்தில் 11 விழுக்காடு அதிகரித்திருக்கிறது என்கிறார் அவர்.

இது ஆரோகியமாக இல்லை என்றாலும் சுகாதாரத்துறை மிகக் கடுமையாகப் போராடுகிறது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை. முன்னணிப் பணியாளர்கள் சோர்வில் இருந்தாலும்  ஓய்ந்துவிடவில்லை. என்பதும் உண்மை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here