இந்நாட்டில் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்துகளைச் சேர்க்கும் எந்தக் கட்சியினரின் நடைமுறையையும் தடுத்து நிறுத்துவதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியாக உள்ளார். இது தொடர்பான அனைத்து முயற்சிகளையும் நிரூபிப்பேன். சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகள் உட்பட தனிநபர்களின் ஊழலை எதிர்த்தும் போராடுவேன் என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இன்னும் சில ஆண்டுகளில் நம் நாட்டின் கொள்கை அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் தங்கள் சக்தியால் செல்வத்தை வளர்க்கும் பெரிய மனிதர்களையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்று நேற்று அனைத்துலக ஹலால் கண்காட்சியைத் தொடக்கி வைத்து உரையாற்றுகையில் கூறினார்.

இதனிடையே, நாட்டை நிர்வகிக்கும் ஒருவர் தூய்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டும் என்றும் பெரும் பணக்காரர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக மக்களைப் பாதுகாக்கும் கொள்கையைப் பாதுகாக்க தம்மிடம் உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
இதனால்தான், விசாணையின்போது லஞ்சம் வாங்குபவரை தற்காக்காமல் கண்டிக்கும் வகையில் துணிவுடன் விசாரணை செய்ய வேண்டும் எனவும் அவர் சொன்னார்.




















