சிலாங்கூரின் வசதியற்றவர்களுக்கு குடிநீர் வாய்ப்பு

கோலாலம்பூர் , ஏப் 29-

ஆயர் தாருல் எஹ்சான்  திட்டத்திற்கு மொத்தம் 184,020 தனிநபர் மீட்டர் கணக்கு வைத்திருப்பவர்கள் தகுதி பெற்றுள்ளனர் என்று பெங்குருசன் ஆயர் சிலாங்கூர் எஸ்.டி.என் பி.டி சிலாங்கூர்  இன்று தெரிவித்துள்ளது.

ஓர் அறிக்கையில், ஆயர் சிலாங்கூர் 2019 டிசம்பர் 31 ஆம்நாள் அத்திட்டத்தின் இறுதி தேதியின்படி, சிலாங்கூர் அரசு 211,344 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. பல மறுஆய்வு செயல்முறைகளையும் நடத்தியுள்ளது.

உள்நாட்டு வருவாய் வாரியம், இ-காசி, பந்துவான் சாரா ஹிடுப் ஆகியோரிடமிருந்து பெறப்பட்ட தரவு , வருவாய் தகவல்களைச் சரிபார்க்கவும், வளாக முகவரிகள் பயனர் கணக்கு எண்களின் செல்லுபடியாகும் தன்மை குறித்தும் ஆயர் சிலாங்கூரிலிருந்து தரவுகள், தகவல்கள் இதில் அடங்கும்.

இந்த மதிப்பீட்டின் விளைவாக, 184,020 தனிநபர் மீட்டர் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் என்று கண்டறியப்பட்டுள்ளது. குறைந்த விலை அடுக்கு மாடி குடியிருப்பில் மீட்டர் பயனாளிகளுக்கு, அவர்கள் இத்திட்டத்தின் கீழ் 20 கன மீட்டர் இலவச தண்ணீரைத்  தொடர்ந்து அனுபவிப்பார்கள்.

இந்த திட்டத்தை அமல்படுத்தியதைத் தொடர்ந்து, 2008 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட 1.6 மில்லியன் ஆயர் சிலாங்கூர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான இலவச நீர் திட்டமும் காலாவதியானது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுபெற்ற, தோல்வியுற்ற விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் அல்லது குறுந்தகவல் சேவை (எஸ்எம்எஸ்) மூலம் அறிவிக்கப்படும் என்றும் ஆயர் சிலாங்கூர் கூறியது, ஆன்லைனில் பதிவுசெய்த விண்ணப்பதாரர்கள் மைகாட் , ஆயர் சிலாங்கூர் கணக்கு எண்களைப் பயன்படுத்தி எஸ்எஸ்ஐபிஆர் போர்ட்டல் (சிஸ்டெம் ஸ்மார்ட் இனீசியடிஃப் பெடுலி ரக்யாட்) மூலம் எஸ்ஏடி முடிவுகளைச் சரிபார்க்கலாம்.

அச்சிடப்பட்ட படிவத்தைப் பயன்படுத்தி, பதிவுசெய்த விண்ணப்பதாரர்கள் (ஏப்ரல் 28) முதல் https://ssipr.selangor.gov.my/ இல் உள்ள சிலாங்கூர் அரசு முன்முயற்சி தகவல் மூலம் தங்கள் விண்ணப்பங்களின் நிலையைச் சரிபார்க்கலாம்  என்று அது கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here