நீதி என்ற நான்……

நீதி என்ற நான்……

நிதியும் நீதியும் ஒன்றுதான்   எப்படி என்கிறீர்களா? உண்மைதான். நீதி அனவருக்கும் பொதுவானது, அதுபோலத்தான் நிதியும் அனைவருக்கும் பொதுவானது. நிதியைப் பெறுகின்றவர்களைத் தடுக்கமுடியாது. கிடைக்காதவர்களை ஒதுக்கமுடியாது.  நீதியும் அப்படித்தான்.

சில வேளைகளில் நீதி தவறாகி விடுமோ என்று அஞ்சுவதும் உண்டு. அப்படி நடந்தால் அது, நீதியின் வேளையாக இருக்காது. நீதிக்கான தூண்டுதல்களாகத்தான் இருக்கும்.

அந்த தூண்டுதல்களை ஏற்படுத்துகின்றவர்கள் யார்? அவர்களுக்கான அதிகாரங்கள் என்ன? அந்த அதிகாராத்தைப் பயன்படுத்டுகின்றவர்களால் நீதி பாதிக்கப்படுமா என்பதெல்லாம் இன்னும் தீர்க்கபடாதவைகளாகவே இருக்கின்றன.

இன்றைய நிலைமைக்கு நீதி என்ன சொல்கிறது என்பதற்கு சான்றுகள் இருக்கின்றன. அதற்கு உதாரணமாக சுகாதாரத்துறை துணைத்தலைவர் டாக்டர் நோர் அஸ்மி, அவர்தம் சகா, இவர்களோடு 13 பேர் கிரிக் மாவட்ட நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டது முக்கியமானதாகப் பேசப்படுகிறது. நீதிக்கூண்டில் நிதி பேசாது, ஆனாலும். நீதி நிதியை வசூலிக்கும். அத்ர்கு இணங்காவிட்டால் இரண்டையும் அனுபவிக்க வைத்துவிடும். நல்லதைச்செய்வதும் நீதியின் ஒரு பக்கம் தான் நிற்கிறது.

இங்கே, அதிகாரத் துஷ்பிரயோகம் பற்றிய கருத்துகள் எடுபடவில்லை என்பதற்கு இது ஒரு சான்று. மூடி மறைப்பதற்கும் ஒன்றுமில்லை. காரணம் இது குற்றம் இல்லாத குற்றமாகியிருக்கிறது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

மூடி மறைக்க வேண்டிய அவசியமில்லாததால் முகநூலில் பதிவேற்றியிருக்கிறார்கள். அப்போது அதன் விளைத்தன்மை பற்றி அவர்கள் யோசிக்கவேயில்லை என்பதுதான் உண்மை. இது யதார்த்தம்.

பேசப்பட்ட செய்தி நன்மைக்கானதுதான். ஆனாலும் தவறான காலத்தில் அது செய்யப்பட்டிருக்கிறது. மக்கள் நடமாட்டக் கூடல் இடைவெளி ஆணை என்பது பிரதமருக்கும் பொருந்தும். நாட்டின் பேரரசரும் கடைப்பிடித்துவருகிறார் என்பதும் கவனிக்கத்தக்கது,

இந்த மட்டில் நாட்டு மக்கள் அனைவருக்கும் இது பொருந்துவதாக இருப்பதால், ஒரு தரப்புக்கு மட்டுமே நீதி என்றாகிவிடவில்லை. நீதி கடைப்பிடிக்கப்படுகிறது என்பதை நாட்டுமக்கள் தாராளமாக நம்பலாம் என்பதே இதன் அர்த்தம்.

அதை உறுதிப்படுத்தும் வகையில் நீதி, சுகாதாரத்துறை துணை அமைச்சர் மீதும் பாய்ந்திருக்கிறது . நீதி சுகாதாரமாய் இருக்கிறது என்பதே இதன் பொருளாகிரது. நீதி எவருக்கும் அஞ்சாது, நீதிக்கு அஞ்சுகின்றவர்களே அதிகம் இருக்கிறார்கள். ஆனாலும் நீதியை மதிப்பவர்களால் மட்டுமே நாடும், நாட்டு மக்களும் காப்பாற்றப்படுகிறார்கள்.

நீதி மதிக்கப்பட வேண்டுமானால் உண்மை வெளிப்படவேண்டும் .டத்தோ டாக்டர் நோர் அஸ்மி உண்மைக்கு தலைவணங்கியிருக்கிறார். அவர் தன் தவற்றுக்கு மன்னிப்பும் கேட்டிருக்கிறார்.

நீதி நிலையானது, விலைபோகாது என்பதற்கு இது சிறந்த உதாரணம்.  இது அவருக்கும் அவர்தம் சகாக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மக்களுக்கும் ஓர் எச்சரிக்கை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here