சென்னை,ஏப்ரல் 30-
கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்தியாவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், சர்வதேச விமானப்போக்குவரத்து உள்நாட்டு விமானப்போக்குவரத்து முடங்கியுள்ளது.
இதனால், வெளிநாடுகளில் பணி மற்றும் கல்வி, தொழில் நிமித்தமாக சென்ற தமிழர்கள் உள்பட இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு பிரத்யேக இணையதள பக்கத்தை ஏற்பாடு செய்துள்ளது. https://nonresidenttamil.org/home என்ற இணையதளத்தில் தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.