இந்தியாவுக்கு நான் எப்போது திரும்புவேன் எனச் சொல்ல முடியாது: நீதிமன்றத்தில் விஜய் மல்லையா தகவல்

இந்தியாவின் தொழில் அதிபரான விஜய் மல்லையா பல்வேறு வங்கிகளில் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தினால் மோசடி மற்றும் பண மோசடி வழக்கை எதிர்கொண்டு வருகிறார். இவர் 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் இருந்து தப்பி ஓடினார். தற்போது இங்கிலாந்தில் உள்ளார்.

அவரை தப்பிய ஓடிய பொருளாதார குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இதனை எதிர்த்து மும்பை நீதிமன்றத்தில் விஜய் மல்லையா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர், கவுதம் அங்காத் கொண்ட அமர்வு, விஜய் மல்லையா இந்தியா திரும்பும் வரை இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது. அவர் இந்தியாவுக்கு திரும்பும் எண்ணம் உள்ளதா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும் என்று கடந்த வாரம் தெரிவித்தது.

இந்த நிலையில் அமித் தேசாய் என்ற வழக்கறிஞர் மூலம் விஜய் மல்லையா மும்பை உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார். அதில் “இங்கிலாந்தில் வெளியேற என்று சட்டபூர்வமாக தடைவிதிக்கப்பட்டுள்ளது. என்னுடைய பாஸ்போர்ட் திரும்பப் பெறப்பட்டுள்ளது. இதனால் செயலில் இருக்கும் பாஸ்போர் என்னிடம் இல்லை. ஆகவே, நான் எப்போது இந்தியாவுக்கு திரும்புவேன் என்று சொல்ல முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here