கூடல் இடைவெளியே சிறந்த மருந்து!

இடைவெளி
கூடல் இடைவெளி

இன்று, மே 1 2020  தொழலாளர் தினம் உலகமெங்கும் கொண்டாடியிருக்க வேண்டும். அனால், அப்படி நிகழவில்லை. நிகழாமல் இருப்பதற்குக் காரணங்கள் பல இருக்கின்றன. அதில் முதல் காரணம் கொரோனா என்பது, உலக மக்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறது.

அப்படியே யாருக்கும் தெரியாமல் இருந்தால் உலக வரைபடத்தில் வடதுருவம், தென்துருவ மக்களாத்தான் இருக்க முடியும்.

இப்படியும் கூறிவிட முடியுமா?. ஒவ்வொரு நாட்டிலும் ஒன்றுமே அறியாத மக்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியும் உண்டு, சில நாடுகளில் உள்ள ஆதிவாசிகளுக்கு உலக நடப்புகள் எதுவுமே தெரியாதாம். மின்சாரம் இல்லை, சுத்தமான நீர் இல்லை. அடிப்படை வசதிகள் எதுவுமே இல்லை என்பதைப் படித்தறிந்திருக்கிறோம்.

மலேசிய பூர்வக்குடியினர் சிலர் நோயினால் இறந்துபோனார்கள். அவர்கள் மர்ம நோயால் இறந்தார்கள் என்றார்கள். பிறகுதான் தெரிந்தது அவர்கள் அம்மை நோயால் இறந்தார்கள் என்று. இதிலிருந்தே அவர்களுக்கு இன்னும் முழுமையான வாழ்க்கை வாய்ப்புகள், நவீன சுகாதாரம் வழங்கப்படவில்லை என்பது புலனாகிறது. கொரோனா பற்றி அவர்களுக்குத் தெரிந்தாலும் அது பொருட்டல்ல அவர்கள் கவலைப்படப்போவதுமில்லை.

அவர்களில் 0.1 விழுக்காடு கூட கல்வியாளர்கள் இல்லை. உலக நடப்புகள் ஓரளவு தெரிந்தவர்களாக  இருக்கலாம். ஆனால் அடையாளமில்லை.
அவர்களுக்கான வேலை வாய்ப்பும் என்பதும் கேள்விக்கானதாகவே இருக்கிறது.

சில தொழிற்சாலைகளில் பணி செய்கிறார்கள். பலர் இவற்றை விரும்புவதில்லை. நகர்ப்புறப் பகுதிகளை ஒட்டியுள்ள சில இடங்களில் முன்னேறிய அறிகுறிகள் இருக்கின்றன. என்றாலும்  அவர்கள் இன்னும் காட்டுவாசி பட்டியலில்தான் காலம் தள்ளுகிறர்கள்.

பெத்தாய் காய்கள் சந்ததைக்கு வர அவர்களே காரணமா இருக்கிறார்கள். பெத்தாய் காய் சர்க்கரை நோயைக்கட்டுப்படுத்துமாம்.

ஒருவேளை முன்னேற்றம் அடையாமல் காட்டு மனிதர்களாகவே மக்கள் வாழ்ந்திருந்தால் புதுமை நோய்கள் வந்திருக்காது அல்லவா? பூர்வக்குடிமக்களுக்கு கடுமையான நோய்கள் இப்பொதுதான் தெரிய வருகிறது.

அவர்கள் இப்போது நகர மக்களின் இடைவெளியில் நெருங்கி இருக்கிறார்கள்.

இந்தக் கொரோனா காலத்தில் வேலையிழப்பு பற்றிய கவலை அவர்களுக்கு அறவே இல்லை. தொழிலாளர் தினம் என்பதெல்லாம் அவர்களின் பிரச்சினை அல்ல.

கொண்டாடுவதும் கொண்டாடாமல் இருப்பது பற்றியும் அவர்கள் யோசிப்பதும் இல்லை. சங்கத்திற்குச் சந்தா கட்ட வேண்டியது அறிக்கைகளைக்கூட அவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் ஆன்லைன் பற்ரியும் இப்போதுதான் கேள்விப்பட்டிருப்பார்கள்.

நவீன நகர்ப்புற மக்களுக்கு நாடுபற்றியும் தொழில்பற்றியும், கொரோனா பற்றியும்தான் கவலை.

வேலையிழப்பு பற்றியும் கவலைகள் அதிகம். எம்டியூசி  என்ன செய்கிறது என்பார்கள்.
பூர்வக்குடியினர்கள எத்தனைபேர் கொரோனாவில் கவலைப்படுகிறார்கள் ,மன உளைச்சலில் இருக்கிறார்கள் என்ற புள்ளிவிவரங்கள் இதுவரையில் இல்லை. பேராசிரியர்கள் அவர்களை ஆய்வு செய்ய முற்படவில்லையே ஏன்? அவர்கள் ஆய்வுக்குரியவர்கள் இல்லையா?

அவர்களுக்கு கோரோனா தெரியாது, தொற்றவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கைதானே சிறந்தது.

இவர்களை ஏன் பேராசிரியர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. இவர்களின் வாழ்க்கை சிறந்தது என்றால் பல்கலைக்கழகப் படிப்பு எதற்கு? இது, உண்மையென்றால் அவர்களின் வாழ்க்கைதானே சிறந்ததாக இருக்கமுடியும்?

பூர்வக்குடியினர் பசுமை நிறைந்த காடுகளை நம்பினர்.

நகர்ப்புற மனிதன் கட்டடங்களை நம்பினான். இதுதான் மாறுபாடு.

மனிதனால் ஒன்றுமே செய்யமுடியாமல் இருந்த ஒஸோன் ஓட்டை இப்போது மூடப்பட்டு வருகிறதாம் எப்படி அது நடக்கிறது? ரசாயனம், ரசாயனம் கலந்த நெடிகள் இல்லை. புகை மண்டலம் இல்லை. பொய்மைத் தயாரிப்புகள் ஓய்ந்து கிடக்கிகின்றன. அதனால்தான் இத்துணையும் நடக்கின்றன.

ஆனாலும், மக்கள் திருந்தப் போவதில்லை. மேதினம் கொண்டாடுவார்கள், புரட்சி செய்வார்கள். சம்பள உயர்வு கேட்பார்கள், வேலை நிறுத்தக்கொடி பிடிப்பார்கள். தொழிற்சாலைகள் புகைமூட்டத்தைக் கக்கும். வாகன இரைச்சல் அதிகமாகும். பசுமை அழியும், காடுகள் சுருங்கும் கட்டடங்கள் உயரும். கடல் பொங்கி எழும்.

கடற்பனிப் பாறைகள் கரையும்.

இதனால் ஓஸோன் ஓட்டை மீண்டும் பெரிதாகும். கொரோனா வெட்கப்படும். ரசாயன யுத்தம் தொடரும். புதிய கொரோனா குடும்பத்தில் கோவிட் -29 தொற்று உருவாகவும் கூடும். அத்ற்கு நவீனம் என்ன செய்யப்போகிறது?

மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாடு தானே மிகச்சிறந்த மருந்து!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here