கோலசிலாங்கூர், மே.1-
சாலை கட்டுமானம், வடிகால் பிற தொடர்புடைய பணிகள் காரணமாக இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை கோலசிலாங்கூர் சாலை மூடப்படும் என்று எம்எம்சி- கமுடா குத்தகை நிறுவனம் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டாமான்சாரா பூச்சோங் அதிவேக நெடுஞ்சாலையில் (எல்.டி.பி) இருந்து ஜாலான் கோலா சிலாங்கூருக்கான நுழைவுப் பாதை வரை மூடப்படுவது மே 2ஆம்நாள் தொடங்கி மே 31 வரை நீட்டிக்கப்படும் என்று அவ்வறிக்கை தெரிவித்திருக்கிறது.
எல்.டி.பி, பெர்சியரான் ஜாத்தி, கெப்போங் ஆகிய இடங்களைச் சேர்ந்த சாலைகளைப் பயன்படுத்துகின்றவர்கள் பாயா சுங்கை பூலோவை பயன்படுத்தலாம்.
போக்குவரத்தின் போது சாலை அடையாளங்களை முழுமையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இதற்கிடையில், பெர்சியரன் ஜாத்தி, துட்டா-உலு கிளாங் 2, அதிவேக நெடுஞ்சாலை (டியூக் 2) ஜாலான் கோலசிலாங்கூரில் மத்திய வட்டச் சாலை 2 (எம்ஆர்ஆர் 2) ஆகிய பாதைகள் மூடப்படுவதும் இந்த காலகட்டத்தில் நீட்டிக்கப்படும்.
எல்.டி.பி யிலிருந்து சுங்கை பூலோ, பெர்சியாரன் பெர்டானா நோக்கிச் செல்லும் பயனர்கள், சுங்கை பூலோவிலிருந்து பெர்சியாரான் ஜாத்தி, டியூ.கே 2, எம்.ஆர்.ஆர் 2, பெர்சிம்பாங்கான் மஞ்சலாரா பயனர்கள் சுங்கை பூலோவை நோக்கிச் செல்வதை உள்ளடக்கியதாக இருக்கும்.
இதற்கிடையில், டியூக் 2, எம் ஆர்.ஆர் 2, மூடல்கள் காரணமாக, கெப்போங்கிற்குச் செல்ல விரும்பும் சாலை பயனர்கள் ஜாலான் கோலசிலாங்கூரைப் பயன்படுத்த வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.