சிரம்பான் மார்க்கெட் வர்த்தகர்கள் இருவருக்கு கோவிட்-19 தொற்று உறுதி

சிரம்பான்:இரண்டு வர்த்தகர்களுக்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து இங்குள்ள சிரம்பான் ஈரச் சந்தை காலவரையின்றி சுத்தம் மற்றும் சுத்திகரிப்புக்காக மூடப்பட்டுள்ளது என்று மேயர் டத்தோ ஸசாலி சலேஹுடின் கூறுகிறார்.

சனிக்கிழமை (மே 2) இரண்டு உறுதி செய்யப்பட்ட சம்பவங்கள் குறித்து மாநில சுகாதாரத் துறையால் அறிவிக்கப்பட்ட பின்னர் சந்தையை மூட அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தபோது மாநில  மந்திரி பெசார் டத்தோ  அமினுதீன் ஹருனும் உடனிருந்தார்.

கோவிட் -19 உறுதி செய்யப்பட்ட செலாயாங் மொத்த சந்தையின் வர்த்தகர்களுடன் நெருங்கிய தொடர்புக்கு வந்த பின்னர், சுகாதார அதிகாரிகள் 15 வர்த்தகர்களிடமிருந்து வெள்ளிக்கிழமை (மே 1) சோதனை மாதிரி எடுக்கப்பட்டது.

சந்தை எவ்வளவு காலம் மூடப்பட்டிருக்கும் என்று கேட்டதற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்களுக்கு மூடப்படும். ஆனால் அது தொடருமா என்பது குறித்து தற்போது எதுவும் கூற முடியாது என்றார். வைரஸ் தாக்கத்தைத் தொடர்ந்து, நகராண்மைக் கழகம்  சுத்தம் மற்றும் சுத்திகரிப்பு ஆகியவற்றை மேற்கொள்ள செவ்வாய்க்கிழமைகளில் சந்தை பொதுவாக மூடப்படும்.

அதே நோக்கத்திற்காக புதன்கிழமைகளிலும் கிருமிநாசினி பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.  சந்தையைச் சுற்றியுள்ள பல வணிக வளாகங்களையும் இப்போதைக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது என்று ஸசாலி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here