ஊரடங்கு முடிவடைந்ததால் மஸ்ஜித் இந்தியா பகுதியில் முள்வேலிகள் அகற்றப்பட்டன

கோலாலம்பூர்:  ஊரடங்கினால்   மூடப்பட்டிருந்த மஸ்ஜித் இந்தியா பகுதி மீண்டும் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. மலாயன் மேன்ஷன், சிலாங்கூர் மேன்ஷன் மற்றும் மெனாரா சிட்டி ஒன் ஆகியவற்றைச் சுற்றியுள்ள முள்வேலி வேலிகள் அகற்றப்பட்டிருக்கிறது. இப்பகுதியில் பல வணிக வளாகங்களும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பல உரிமையாளர்கள் சமூக தூரத்திற்கான குறிப்பான்களை நிறுவியுள்ளனர்.

மலாயன் மேன்ஷனில்  தனது வணிகம் ஒரு மாதத்திற்கும் மேலாக மூடப்பட்டுள்ளதாக பலசரக்கு  கடை உரிமையாளர் சஜகான் வஹாப் தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை (மே 5) கடை திறக்கப்படுவதற்கு முன்பு நாங்கள் பெரியளவில் சுத்தம் செய்கிறோம். மஸ்ஜித் இந்தியா பகுதியை சுத்தம் செய்ய அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சிகளுக்கும் இவ்வேளையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்  என்று அவர் கூறினார்.

இரு குடியிருப்புகளிலும் வசிப்பவர்கள் அருகிலுள்ள பல்பொருள் அங்காடிகள் மற்றும் கடைகளில் தேவைகளுக்காக ஷாப்பிங் செய்வதைக் காண முடிந்தது. இருப்பினும், இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கடைகள் செயல்படத் தொடங்கவில்லை,.

மஸ்ஜித் இந்தியாவுக்கான சாலைகள், குறிப்பாக  ஜாலான் துவாங்கு அப்துல் ரஹ்மான், ஜாலான் துன் பேராக், ஜாலான் முன்ஷி அப்துல்லா மற்றும் ஜாலான் டாங் வாங்கி ஆகியவையும் இப்போது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர்  ஏசிபி டத்தோஶ்ரீ மஸ்லான் லாசிம், சுகாதார அமைச்சினால் அமைக்கப்பட்ட எஸ்ஓபிகளுடன் அனைவரும் இணங்குவதை உறுதி செய்வதற்காக  போலீசார் நிலைமையை .  குறிப்பாக சமூக தொலைவினை கண்காணிப்பார்கள்

நாங்கள் SOP களுக்கு இணங்க மக்களுக்கு அறிவுறுத்துவோம், எச்சரிக்கைகளை வெளியிடுவோம். வைரஸின் தொற்று சங்கிலியை உடைப்பதே எங்கள் முக்கிய குறிக்கோள  என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here