நடப்பு அரசாங்கம் அதிகாரப் பூர்வமற்றதாம்! ஆ, அப்படியா? கொடுத்த பிரிஹாத்தின் உதவி நிதியையைச் திரும்பச்செலுத்தச் சொல்வார்களா? இன்னும் பிற வாய்ப்புகளுக்கு இடையூறு வருமா? இப்படியெல்லாம் கேள்விகள் எழலாம். பதில்கள் எப்படியும் அமையலாம்.
அரசியலில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நிரந்தர பகைவர்களும் இல்லை என்பது அரசியலைப் பொறுத்த மட்டில் வேதச் சொல்லாகவே இன்றுவரை இருந்து வருகிறது. அது வேதச்சொல் மட்டுமல்ல, மந்திரச்சொல்லாகாவும் இருப்பதால் உலக அரசியலில் அது இன்னும் கடைப்பிடிக்கப்பட்டே வருகிறது.
மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்ன மேதைக்கு இந்த நேரத்தில் ஒரு சலாம் போட்டுவைக்கலாம்.
மாற்றங்கள் இல்லாமல் ஏதுமில்லை. அரசியலில், மாற்றங்கள் என்பது தொடர்ந்து வரவேண்டும் அப்படி வந்தால்தான் அது நியாயத் தராசில் சமமாய் நிற்கும். இல்லையென்றால் அது விற்பனைக்கானதாகிவிடும்.
இந்த வகையில், மலேசிய அரசியல் எதைக் காட்டுகிறது? ஊஹூம், எதையும் காட்டவில்லை என்கிறீர்களா. அப்படியும் சொல்லிவிடமுடியாது. பலவற்றைக் காட்டுகிறது என்பதுதான் உண்மை. பலவற்றைக் கற்றுக்கொடுக்கிறது என்பதும் உண்மை.
கொரோனா குடுமி, சும்மா ஆடவில்லை என்ற புது வார்த்தையைக் கூறவேண்டும் என்றும் யோசனை தோன்றுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் மரபுவழி என்பார்கள் இதுதான் இன்றுவரை மாறாமல் இருக்கிறது என்றால், புதிய அரசியல் மாற்றங்களை ஏன் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இப்படிச் சொல்வதும் தவறுதான். திரும்பத் திரும்பவந்தால் கூட மாற்றம்தான். அது , காலச் சுழற்சியில் இடம்பெற்றுவிடும். காலச்சுழற்சியில் மீண்டும் பழையது வராது என்று கூறுவதற்கில்லை. அப்படி வந்ததாகக் கருதினால் துன் டாக்டர் மகாதீர் முகம்மது இருக்கிறாரே. அவரின் வருகையைச் மக்கள் ஏற்றுக் கொண்டார்களே? இது ஏன் நடந்தது. மக்கள் மந்தைளாக இருப்பதைத்தானே இது காட்டுகிறது. ஆடு எவ்வழியோ குட்டிகளும் அவ்வழியே என்ற அரசியலில்தான் மக்கள் காலம் கடத்தியிருக்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
புதியவற்றில் வண்ண மினுப்பல் வெகுவாய் ஈர்க்கும். அப்படித்தான் மக்கள் புதிய ஆட்சியில் ஏமாந்து போனார்கள். புதியவை புத்தம் புதியதாக வந்திருந்தால் இந்தக் குறைபாடுகள் ஒரு பொருட்டாய் இருந்திருக்காது. புதியதில் இணைந்த பழமையை ஈராண்டுகளுக்குமுன் யாரும் பொருட்படுத்தாமல் விட்டதுதான் மக்கள் செய்த தவறாகிவிட்டது. அதன் பாதிப்பு அண்மையில்தான் உணரப்பட்டது.
பதினைந்து ஆண்டுகளுக்குமுன், நம்பிக்கையோடுதான நண்பர்களோடு வந்த எதிரியை மன்னித்து ஏற்றுக்கொண்டார்கள். இந்நிதயர்கள் மன்னிப்பதில் வல்லவர்களாயிற்றே! அப்போது அதுதான் நியாயமாக இருந்தது. அதனால் அன்றைய வார்த்தைகளை ஏற்றுக்கொள்வதற்கும் மன்னிப்பதற்கும் சரியான காரணம் கூறப்பட்டதை அப்பழுக்கில்லாமல் மக்கள் நம்பினார்கள். ஆனால், மகா துரோகம் இழுத்துக்கொண்டே போவதற்கு முன்னாள் சிலாங்கூரும் கூட இருந்தே துரோகச் சாயத்தைப் பூசியதை அவரின் சகோதரர் முன்னமே கூறியிருந்தார். அப்போது அது உணரப்படவில்லை.
காலம் கடந்தது. வாக்கூறுதியில் மட்டும் நீளமான நூல் இணைக்கப்பட்டுக்கொண்டே இருந்தது. அதனால், வாக்குறுதிக்குள்ளான பட்டம் காற்றில் பறந்ததே அன்றி, நிலையாகப் பறக்கமுடியவில்லை.
முளைத்த ஆட்சியில், பழமையின் ஆதிக்கம் அரங்கேறிவிடக்கூடாது என்பதில் அரசியல் ஒத்திவைப்புகள் நிதானமாக நடந்துவருகின்றன. புதியதில் மக்கள் எந்தக்கருத்துகளையும் பதிவிட முடியாமல் கொரோனா ஆட்சியமைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது மக்களின் சிந்தனை அரசியலில் இல்லை. மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையில் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக அரசியலை கொரோனா வழிநடத்துகிறது.