மனைவி திட்டியதால் குடிபோதையில் இருந்த கணவன் வீட்டை கொளுத்தினான்

லுமூட் (பெர்னாமா): குடிபோதையில் இருந்த கணவனை  மனைவி திட்டியதால் ஆத்திரமடைந்த ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (மே 10) இங்குள்ள சித்தியவானில்  தாமான் இஜாவ் உள்ள  தனது சொந்த வீட்டிற்கு தீ வைத்ததாகக் கூறப்படுகிறது.

இரவு 11.45 மணியளவில் தீ விபத்துக்குள்ளான பின்னர் தப்பி ஓடிய 40 வயது அந்த ஆடவரை  போலீசார் தேடி வருவதாக மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏ.சி.பி. நோர் ஒமர் சப்பி தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததாகவும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் கூறினார். மனைவியின் கூற்றின் அடிப்படையில், வீட்டிற்கு வந்தபோது மிகவும் குடிபோதையில் இருந்தாக  அக்கம் பக்கத்தினர் தூக்கத்திற்கு சங்கடம் விளைவிக்குமாறு கூச்சலிட்டதாகத் தெரிய வருகிறது.

மனைவியின் கண்டிப்பில் கோபமடைந்த அந்நபர் தனது நிசான் காரை வேகமாக அழுத்தியதோடு வீட்டிற்கு தீ வைத்து விட்டு பின்கதவு வழியாக தப்பியோடி இருக்கிறார்.

வீட்டின் தளவாடங்கள் மற்றும் உட்புறங்களில் கிட்டத்தட்ட 50 விழுக்காடு தீயில் அழிந்ததாகவும் அதன் இழப்பு RM18,000 என்றும் தீயணைப்பு வீரர்கள் கண்டுபிடித்ததாக ஒமர் கூறினார். காவல்துறையினரின் மேலதிக பரிசோதனையில் ஒரு அறையில் துருப்பிடித்த மற்றும் சற்று எரிந்த போலி கைத்துப்பாக்கியும் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார். சந்தேக நபர் மீது  ஐந்து போதைப்பொருள் குற்றங்களுக்கான பதிவு இருப்பதாகவும் அவர் கூறினார். – பெர்னாமா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here