வீட்டில் கஞ்சா வளர்த்தவர் கைது

கோலாலம்பூர்: இங்குள்ள  தாமான் ஸ்ரீ கோம்பாக்கில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா வளர்த்து வந்தது போலீசாரின் அதிரடி சோதனை மூலம்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கோம்பாக் மாவட்ட போலீஸ் தலைவர்  ஏசிபி அரிஃபாய் தாராவே, திங்கள்கிழமை (மே 11) ஒரு அறிக்கையில், மே 10 அன்று இரவு 10.30 மணியளவில் இந்த சோதனை மேற்கொண்டோம். அதில் 31 வயதான ஒரு நபரை சோதித்த கஞ்சா என்று நாங்கள் சந்தேகித்த உலர்ந்த இலைகளைக் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பை மற்றும் மாற்றியமைக்கப்பட்ட ஒரு பாட்டிலும் கண்டெடுக்கபட்டுள்ளது. இது போதைப்பொருளை புகைப்பதற்கான கருவியாகப் பயன்படுத்தப்பட்டது என்று நாங்கள் நம்புகிறோம்.

சந்தேகத்திற்குரிய மரிஜுவானா என்ற போதை பொருள் வைத்திருக்கும் ஒரு பிளாஸ்டிக் கொள்கலன், சுமார் 50 செ.மீ உயரத்துடன் வீட்டின் முன்புறத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்று அவர் கூறினார். அந்நபர் கஞ்சா உட்கொண்டிருப்பது சோதனை வழி உறுதி செய்யப்பட்டது. முதல் கட்ட விசாரணையில் இரண்டு மாதங்களுக்கு முன் அச்செடி நடப்பட்டதாக தெரிய வந்துள்ளது. அந்நபர் ஐந்து நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என  என்று ஏசிபி ஆரிஃபாய் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here