அடுக்குமாடியில் இருந்து தூக்கி எறியப்பட்ட பெண் குழந்தை – மூளை மற்றும் இருதயத்தில் காயம்

பாலேக் பூலாவ்: பாயான் லெப்பாஸில் உள்ள அடுக்குமாடியின் நான்காவது மாடி பால்கனியில் இருந்து புதிதாகப் பிறந்த பெண் குழந்தை  புதன்கிழமை (மே 13) தனது சொந்த தாயால் என்று நம்பப்படுபவரால் தூக்கி எறியப்பட்ட குழந்தை பினாங்கு மருத்துவமனையில் நலமாக  இருக்கிறார்.

குழந்தை தற்போது பினாங்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (ஐ.சி.யூ) இருப்பதாக பாலேக் பூலாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் சூப்பிரண்டென்டன்ட் ஏ.அன்பழகன் தெரிவித்தார். மருத்துவரின் கூற்றுப்படி, குழந்தைக்கு தலையில் விரிசல் ஏற்பட்டு மூளையில் காயம் ஏற்பட்டிருப்பதோடு இருதயமும் காயமடைந்துள்ளது.

 குழந்தை மற்றும் சந்தேக நபர் இருவரும் சிகிச்சைக்காக பினாங்கு மருத்துவமனையில் உள்ளனர். விசாரணையின் வசதிக்காக சந்தேக நபரின் காதலனை நாங்கள் கைது செய்தோம்” என்று அவர் வியாழக்கிழமை (மே 14) ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

புதன்கிழமை (மே 13), 18 வயதான கடை உதவியாளர் ஒருவர் தனது பிறந்த குழந்தையை  பால்கனியில் இருந்து தூக்கி எறிந்ததாகக் கூறப்படுகிறது. தூக்கி எறியப்பட்ட அக்குழந்தையை அன்றைய தினம் காலை 7 மணியளவில் பெற்றெடுத்ததாக இளம்பெண் ஒப்புக்கொண்டதாக  அன்பழகன் தெரிவித்தார்.

சம்பவம் நடந்தபோது சந்தேக நபரின் பெற்றோர் கிளந்தானில் இருந்தனர், அவருடன் தங்கியிருந்த அவரது இரண்டு உடன்பிறப்புகளுக்கும் இது பற்றி தெரியாது. சந்தேக நபர் தனது கர்ப்பத்தை தனது குடும்பத்தினரிடமிருந்து மறைத்தார்.

குழந்தையின் தந்தை தனது 18 வயது காதலன் என்பதை அவர் பின்னர் வெளிப்படுத்தினார் என்று அவர் கூறினார். தண்டனைச் சட்டத்தின் பிரிவு 317 இன் கீழ் 12 வயதிற்கு உட்பட்ட ஒரு குழந்தையை ஒரு பெற்றோர் அல்லது நபர் கவனித்துக்கொண்டது அல்லது பராமரிப்பாளரால் கைவிடப்பட்டது என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்திருப்பதாக  அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here