மனிதனே மருந்து, மருந்தே மனிதன்!

கொரோனா தன்வழியில் போய்க்கொண்டிருக்கிறது. அதன்வழியில் குறுக்கிட்டவர்களை அது அரவணத்துக் கொள்கிறது அதன்பின் சமயம் பார்த்துக் கொல்கிறது. அது அரவணைத்துக் கொள்வதன் நோக்கம் கொல்வது மட்டுமே என்று தெரிந்தும் அதன் வழிக்குச் சாதகமாக்கிக்கொள்கிறோம். இது அறிவா? அறிவீனமா?

நிச்சயம் அறிவீனம்தான். தெரிந்தே தவறு செய்வதை என்னவென்றுதான் கூறுவது? தமிழில் ஒன்று கூறுவார்கள். உணவே மருந்து மருந்தே உணவு  என்பார்கள். அதை இப்போது மனிதனே மருந்து மருந்தே மனிதம் என்றும் கூறத்தோன்றுகிறது.

கொரோனாவுக்கு மருந்தே தேவையில்லை. மனித இடைவெளிக்கு மதிப்பு கொடுத்தாலே போதும். அதுதான் மருந்து என்று சுகாதாரத் துறையே பாடிப்பாடிச்சொல்கிறது. அந்தப்பாட்டு இன்னும் சிலரின் காதில் விழவே இல்லை’. இந்தச் சிலர்தான் தொடரும் தொற்றுக்கு முகவர்கள்.

 

இன்றைய நிலையில் 90க்கும் கூடுதலான விழுக்காட்டில் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணையைப் பின்பற்றுகின்றனர் என்ற செய்தி மகிழ்ச்சியைத் தந்திருப்பதால், தொழிற்துறைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன. இதனால் மீண்டும் வேலைக்குச் செல்லலாம் என்ற குழுப்பாட்டும் பாடமுடியும். பெருவாரியான தொழில்துறைகள் திறக்கப்பட்டிருக்கின்றன. வேலிகள் அகற்றப்பட்டு, வேலைகள் தொடங்கப்பட்டிருக்கின்றன.

ஆனாலும், வேலைக்குச் சென்றவர்களில் பலர் மன ஆரோக்கியமின்றி இருப்பதாவும் சுகாரத்துறை அறிவித்திருக்கிறது. இதன் காரணம் பெரிதாக ஒன்றுமில்லை. தொழிற்பேட்டைகளுக்கான பொதுவான இயக்க காட்டுப்பாடுகள் (SOP) கட்டிப்போட்டிருக்கிறது என்பதுதான் காரணமாக இருக்கிறது. நடமாட்ட கட்டுப்பாடு என்பது இன்னும் முற்றாகத் தளர்த்தப்பட்டதாகவும் கருதக்கூடாது என்கிறது இன்னொரு செய்தி.

கடந்த மூன்று மாதங்களில் மனுக்குலத்தைத் திருப்பிப் போட்டிருக்கிறது கொரோனா. அதனால் மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி ஆணியைப் பின்பற்ற வேண்டிய அவசியம் இன்னும் இருக்கிறது. கொரோனாவில் இரண்டாம் அலை வரும் சாத்தியமும் இருக்கிறது என்கின்றனர். அதனால் சுகாதார, பொருளாதாரத் திட்ட மீட்புகளில் கவனமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பொருளாதாரத் திட்டம் என்று வருகிறபோது சில தரப்பினருக்கு மட்டுமே என்ற சத்தமில்லாத முடிவாக இருக்கவே கூடாது. அப்படியிருந்தால், அதனால் மூன்றாம் அலை வந்தாலும்  ஆ ச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

எந்தத் தொற்றையும் மனிதனால் ஒழிக்க முடியும். அது, நெருங்காமல் செய்ய முடியும். மருந்து அவன் கைவசம் இருக்கிறது. அதைப் பயன்படுத்தும் முறை சுலபமானது. சுகாதாரத்துறைக்கு உதவியாக இம்மருந்து அமையும். எந்தசெலவும் இல்லை. முகக்கவசம் தேடி அலைஅயவே௳ண்டியதிலலை.  அதைப் பின்பற்ற ஏன் இத்துணைதயக்கம், மீறல்கள். இத்துணை எகத்தாளம்.

தீயவரைக் கண்டால் தூர ஒதுங்கு என்பது வாக்கு. அதைப் பின்பற்றினால், மிகுந்த நன்மையாக இருக்கும்.  கொரோனாவைக் கண்டால் தீயவர்போல் ஏன் ஒதுங்கக்கூடாது. இடைவெளி ஒரு மீட்டர்தானே. இதில் என்ன குடிமுழுகிவிடப்போககிறது? வரிசையில் நின்றால முன்னால் இருப்பவர் எதிரி என்று நினைத்தாலே போதும். தள்ளி நிற்கும் பழக்கம்தானே வந்துவிடும்.

பற்றினால் பற்று. பற்றற்றால் பறிபோகும் பற்று. அதனால் விதிகளைப்பற்று!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here