கிர் தியோ தஞ்சோங் காராங் வாவாசன் கட்சியின் தற்காலிகத் தலைவராக நியமனம்

 சிலாங்கூரின் முன்னாள் மந்திரி பெசார் கிர்  தியோ, தஞ்சோங் காராங் வாவாசன் கட்சியின் தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு அறிக்கையில், இந்த நியமனத்தை ஒரு “பெரும் பொறுப்பு” என்று விவரித்த அவர், தஞ்சோங் காராங்கில் வாவாசன் கட்சியின் இருப்பை வலுப்படுத்துவதிலும், அப்பகுதி மக்களுக்கு சேவை செய்வதிலும் கவனம் செலுத்துவதாகக் கூறினார்.

எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன் தலைமையிலான வாவாசன் கட்சியில் கிர் கடந்த மாதம் இணைந்தார். பெர்சத்து கட்சியில் சேர்ந்து ஓராண்டுக்குள், அக்கட்சி தனது நோக்கத்தை இழந்துவிட்டதாலும், உட்கட்சிப் பூசல்களால் பீடிக்கப்பட்டிருந்ததாலும் அக்கட்சியிலிருந்து விலகியதாக அவர்  தெரிவித்தார். 2000 முதல் 2008 வரை சிலாங்கூர் மந்திரி பெசாராக இருந்த கிர், சுங்கை பாஞ்சாங் சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை பணியாற்றியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here