பெட்டாலிங் ஜெயா, மே 15-
குடிநுழைவுத் துறையினரின் விதிமுறைகளை மீறியதால் செலாயாங் பாருவில் 113 அந்நியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.
இந்தோனேசியாவை சேர்ந்த 63 பேர், மியான்மாரைச் சேர்ந்த 22 பேர், இந்தியாவை சேர்ந்த 19 பேர், வங்காள தேசத்தை சேர்ந்த 6 பேர் மற்றும் பாக்கிஸ்தான், நேப்பாளைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டதாக குடிநுழைவுத் துறையின் தலைமை இயக்குனர் கைருல் டிஸைமி டாவுட் கூறினார்.
முறையான ஆவணங்கள் இல்லாத காரணத்தினாலும் இந்நாட்டில் ஆவணங்கள் இன்றி நீண்ட நாட்கள் தங்கியிருந்த காரணத்தினாலும் அவர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் கோவிட் தொற்று நோய் இல்லை என்பதையும் அவர் உறுடிப்படுத்தினார். மேற்குறிப்பிட்ட குற்றங்களுக்காக அவர்களின் தண்டனைகாலம் முடிவு அடைந்த பின்னர் சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பபடுவர். அவர்கள் மீண்டும் மலேசியாவிற்குள் நுழைய தடைசெய்யப்படுவர்.
கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனையில் அவ்வட்டாரத்திலிருந்து 1,368 கைது செய்யப்பட்டனர் அதில் 98 சிறார்களும் அடங்குவர், அனுமதியின்றி நாட்டுக்குள் நுழைந்த குற்றத்திற்காக இவர்கள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.