கொரோனா பாதிப்பில் சீனாவை முந்தியது இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு, நோய் அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

தற்போது கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பல்வேறு தொழில்களை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேசமயம், பரிசோதனைகளை அதிகரிக்க, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவில் மொத்தம் 85,940 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2752 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 30153 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

இதன்மூலம் கொரோனா பாதிப்பில் சீனாவை இந்தியா முந்தியதுடன், உலக அளவில் 11வது இடத்திற்கு சென்றுள்ளது.

கொரோனா வைரஸ் வெளிப்பட்ட சீனாவில் இதுவரை 82941 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4633 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here