கோவிட்-19: புதிய சம்பவங்கள் 17 – ஒருவர் மரணம் – மொத்த மரணம் 113

புத்ராஜெயா: நாட்டில் சனிக்கிழமை (மே 16) 17 புதிய கோவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 6,872 ஆக உள்ளது.

சுகாதார இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில்  17 புதிய சம்பவங்களில் 6 வெளிநாட்டினர் சம்பந்தபட்டது.  11 உள்ளூர்வாசிகள்.

அதே நேரத்தில் 24 மணி நேர இடைவெளியில் 73 நோயாளிகள்  குணமடைந்தாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்தார். மலேசியாவில் கோவிட் -19 இலிருந்து 5,512 நோயாளிகள் குணமடைந்துள்ளனர் என்று அவர் கூறினார்.

தீவிர சிகிச்சை பிரிவுகளில் (ஐ.சி.யூ) 13 உறுதி செய்யப்பட்ட கோவிட் -19 சம்பவங்கள் சிகிச்சை பெற்று வருகின்றன, மொத்தத்தில் ஐந்து பேர் வென்டிலேட்டர் ஆதரவில் இருக்கின்றனர் என்று அவர் சனிக்கிழமை (மே 16) தனது தினசரி கோவிட் -19 மாநாட்டின் போது கூறினார். டாக்டர் நூர் ஹிஷாம் மேலும் கூறுகையில் மொத்த  இறப்பு எண்ணிக்கை 113 வழக்குகளாக உயர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here