புத்ராஜெயா, மே. 16-
சொந்த ஊர்களுக்குச் செல்வதாக கூறி நெடுஞ்சாலையை பயன்படுத்த முயன்ற 500 வாகனங்கள் திருப்பி அனுபப்பட்டதாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.
நெடுஞ்சாலையில் பணியில் இருந்த காவல் துறையினர், வாகன ஓட்டுனர்களை திரும்பிச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
மாநிலம் கடக்க முயலும் ஓட்டுனர்களுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து
இன்று நடைபெறவிருக்கும் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்று அவர் கூறினார்.