பாசார் போரோங்கில் தொழில்துறை வாய்ப்பு இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

கோலாலம்பூர், மே. 16-

கோலாலம்பூர் பாசார் போரோங்கில் அந்நியர்கள் ஆதிக்கம் அதிகளவில் இருப்பதாக குறை கூறிய நம்மவர்கள் தற்போது ஏற்படுத்தி தரப்பட்டுள்ள வேலை வாய்ப்பினை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றனர்?

கோவிட் -19 பெருந்தொற்று காரணமாக அந்நியர்கள் கூண்டோடு களையெடுக்கப்பட்டுள்ளனர். இது தான் சரியான வாய்ப்பு. பாசார் போரோங்கில் மீண்டும் மலேசியர்கள் தொழில்துறையில் மேலோங்க முடியும்.
ஒரு காலத்தில் சீனர்களுக்கு நிகராக இந்தியர்களும் அங்கு வியாபாரம் செய்து வந்தனர். அதிகமான இந்தியர்கள் அங்கு வேலை செய்தும் வந்தனர். மொத்த வியாபாரத்தில் இந்தியர்கள் கொடி கட்டி பறந்த காலம் அது.

இடைக்காலமாக அந்நியர்கள் ஆதிக்கம் அதிகளவில் இருந்து வந்தது. மொத்த வியாபாரம் உட்பட, வேலைகளையும் அவர்களே செய்தும் வந்தனர். இதனால் உள்நாட்டவர்கள் பலர் வேலை இல்லாமல் தவித்து வந்தனர். ஆனால் இப்போது அந்நிலை முற்றாக அகண்டுள்ளது. கூட்டரசு பிரதேச அமைச்சு மலேசியர்களுக்கு தொழில்துறை மற்றும் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. வேலை இல்லாமல் திண்டாடிய இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இவற்றை இந்திய இளைஞர்கள் எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள போகின்றனர் என்பது தான் தற்போதைய கேள்வி. . கோவிட் காலக்கட்டத்தில் வேலை இழந்தவர்கள் எண்ணிக்கை அதிரிகரித்துள்ளது. நாள் ஒன்றுக்கு 80 வெள்ளி சம்பளம் என்ற அடிப்படையில் மாதத்திற்கு 2,400 வெள்ளி சம்பளம் என வழங்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அவ்வட்டாரத்தில் அந்நியர்கள் களையெடுக்கப்பட்ட பின்னர் இடம் மிக தூய்மையாகவும், நேர்த்தியாகவும் இருக்கின்றன என்று அவ்வட்டாரத்தில் நீண்ட காலமாக வியாபாரத் துறையில் ஈடுப்பட்டு வரும் இந்தியர்கள் தெரிவித்தனர். அச்சந்தையில் நீண்டக் காலமாக செயல்பட்டு வரும் சிறு தொழில் வர்த்தகர்கள் சங்கத்தினர் வேலைக்கு வரும் இந்தியர்களுக்கு வழிக்காட்ட தயாராக இருப்பதாக சங்கத்தைச் சேர்ந்த மணிசெல்வம் கூறினார். தற்போது அதிகமான இந்தியர்கள் இங்கு வேலை செய்து வருகின்றனர். தொழில் துறை தொடங்குவது குறித்த விவவரங்கள் இன்னும் முழுமையாக கிடைக்கப் பெறாத நிலையில் வேலைக்கு அதிகமானோர் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here