‘பாலேக் கம்போங்’ செய்ய முயன்ற 1,200 வாகன ஓட்டிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்

புத்ராஜெயா, மே 17-

மாநிலங்களுக்கு இடையேயான பயணங்களுக்கு தடை விதித்த போதிலும், நோன்பு பெருநாளை முன்னிட்டு “பாலேக் கம்போங்” செய்ய அதிகமான மக்கள் தீவிரமாக முயல்கின்றனர்.

மூத்த பாதுகாப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் கூறுகையில், நேற்று மாநில எல்லைகளை கடக்க முயன்றபோது 1,248 வாகன ஓட்டிகள் திருப்பி அனுபப்பட்டனர்.

இது வெள்ளிக்கிழமை சாலைத் தடைகளில் போலீசாரால் நிறுத்தப்பட்ட 508 வாகனங்களை விட இரண்டு மடங்கு அதிகம்.

இதுபோன்ற வாகன ஓட்டிகளுக்கு காவல்துறை கூடுதல் அபராதம் விதிக்கும் என்று அவர் எச்சரித்திருந்தார்.

 

ஆனால் பண்டிகை சந்தர்ப்பத்திற்காக பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கோ அல்லது கிராமங்களுக்கோ செல்ல தயாராக இருப்பதாக தெரிகிறது.

காவல்துறையினர் இன்னும் திரும்பிச் செல்லும்படி மட்டுமே கேட்கிறார்கள்.

காவல்துறை கூட்டு அபராதம் விதித்தால், இழப்பு மக்களுக்கு தான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here