அரசு சேவைகளில் ஆர்வம் கூடியிருக்கிறது

ஒரு காரியம் குறித்து அதன் தொடர்பிலான மனிதர்கள்.அல்லது அலௌவலகம் நாடிச்செல்லும்போது மனத்தில் பெரிய அலை அடித்துகொண்டிருக்கும். யாரைப்பார்த்து விவரங்கள் அறிவது, யாரால் உதவமுடியும் என்றெல்லாம் கேள்விகள் எழும். சிலருக்கு கண்ணீர் வரும்.

சென்ற காரியம் கை கூடினால் மகிழ்ச்சியின் எல்லைக்கே போய்விடுவார்கள். இதுதான் வழக்கமானது. செல்லும் காரியத்திற்காக சந்திக்கும் மனிதர் உதவும் மனப்பான்மை கொண்டவரா என்பது அடுத்த கட்ட முயற்சியாக இருக்கும்.

சந்திக்கக்கின்ற மனிதர் சட்டம் பேசுகின்றவராக இருந்தால், இதைவிட சோதனை வேறேதும் இருக்க முடியாது. செய்ய முடிந்த காரியத்தையும் சட்டம் என்ற சாக்கு மூட்டையில் திணிக்கைன்றவர்கள் உயர் அதிகாரிகளாகவும் இருக்கிறார்கள். முன்பு, பலர் இருந்தார்கள். இன்னும் இருக்கலாம்.

கணினி தொடர்பான பிரச்சினையைத் தீர்க்க வருமானத்துறை வாரியத்திற்கு சென்ற போது கணவன் மனைவி இருவரின் கலக்கத்தைப் புரிந்துகொண்டு, உயர் அதிகாரியே களம் இறங்கிகியதை பெருமையாக கருதுகிறார் ஒரு முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர்.

இவர், காஜாங் வட்டாரத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர். இவர் சென்ற இடம் பண்டார் பாரு பாங்கியிலுள்ள வருமானத்துறை அலுவலகம். இவருக்கு உதவியர் உயர் அதிகாரி ஒருவர். கலக்கமடைந்திருந்த அவரின் பிரச்சினைகளை அங்குள்ள அதிகாரிகளும் சிறப்பான சேவையால் முடித்துக் கொடுத்திருக்கின்றனர்.

இச்சேவையை சிரமமின்றி வழங்கியிருப்பதை மிகப்பெருமையாகக் கருதுகிறார் அவர்.
கொரோனா காலத்தில் மக்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். இக்கால கட்டத்தில் மக்களின் தேவை அறிந்து சேவை செய்வது, உதவுவது என்பது சாதாரணமாகிவிட்டது. இது சாதாரணமாக்கப்பட்டிருக்கிறது.

சாதாரணமாக்கியது எது?

அந்த அதிகாரி பேருக்காக இதைசெய்திருக்க வாய்பில்லை. கடமை உணர்ந்து இதைச்செய்திருக்கிறார் என்பது அவர்சார்ந்த துறைக்கு நற்பெயர். அரசுக்கு நற்பெயர்.
மக்களின் தேவைக்குத்தான அரசுத்துறைகளும் அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

அவர்கள் உதாரணங்களாக இருக்க வேண்டும் என்பதைத்தான் அரசும் விரும்புகிறது. மக்களும் விரும்புகிறார்கள்.

மக்கள் இல்லாமல் அரசுத்துறைகள் இல்லை. அந்த அதிகாரி ஒரு வாழும் உதாரணம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here