மக்கள் நடமாட்ட கூடல் இடைவெளி கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைத்திட்டம் முழுமையாகச் செயல்பட்டால்தான் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பும் சாத்தியம் உண்டு என்பது அப்பட்டமான உண்மை. இயல்பு நடைமுறைத்திட்டத்தை பின்பற்றுகின்றார்களா என்பதை உறுதி செய்வது யார்? இதனை உறுதி செய்யும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது?
கண்துடைப்பு என்பதெல்லாம் இதற்குப் பொருந்தாது. இத்திட்டத்தைப் பொறுப்போடு கடைப்பிடிக்காதவரை கொரோனா பாதிப்பு நாட்டை விட்டு வெளியேறாது .
உதாரணமாக தொழிற்சாலைகள் நிபந்தனையுடன் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. எஸ் ஒ பி எனும் நடைமுறைச் சட்டம் முறையாகக் கடைப்பிடிக்கப் படவேண்டும் என்று ஆணையிடப்பட்டிருக்கிறது. ஆனாலும், இது சாத்தியமா என்பதில் இன்னும் அச்சம் நிலவுகிறது.
இதை, நிறுவனங்ககள் உறிதியாக் கடைப்பிடிப்பது உறுதி செய்யப்படவேண்டும். இதற்குப் பொறுப்பானவர் யார்? நிச்சயம் அரசு சார்ந்த அதிகாரி பொறுப்பேற்க வேண்டும். அப்படியானால் அதற்குப் பொறுப்பேற்கும் அதிகாரிக்கான நிதிப்பொறுப்பை ஏற்கும் தரப்பு எதுவாக இருக்கும்? நிறுவனமா? அரசாங்கத்துறையா?
சபா வர்த்தக, தொழிற்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ வில்பிரட் மடியஸ் டாங்காவ் சபாவில் செயல்படும் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்.
நிறுவனங்களின் அதிகாரிகள் இதைச்செய்யலாம். ஆனாலும் நிறுவன அதிகாரிகள் இதற்கானவர்கள் என்பதை அவர்கள் ஆய்வு செய்யப்படவேண்டும். அரசு அதிகாரிகளாக இருந்தால் அவர்களுக்குப்பயிற்சி அளித்தல் முக்கியம்.
கண்காணிப்பு என்பது தொழில் நிறுவனங்கள் முழுமையாக ஆணையைப் பயன்படுத்துகிறதா என்பதை உறுதிப்படுத்துவதாகும். இப்பொறுப்பு தற்காலிகமானது அல்ல. சில ஆண்டுகள் வரை இது நீடிக்கும் அல்லது தொடர்ந்து இருக்கவும் கூடும். ஆதலால் வருமான வரித்துறை அதிகாரிகளாக அவர்கள் இருப்பதே சிறந்ததாக இருக்கும்.