விரைவில் வரவிருக்கும் ஹரிராயா, அல்லது நோன்புப் பெருநாள் அனைவருக்குமானது என்பது மலேசியர்களுக்குப் மிகப்பொருந்தும். மிக அதிகமாக இஸ்லாமியர்களுக்குப் பொருந்தும்.
எப்படிப் பார்த்தாலும் ஒவ்வொரு மதத்தினரும் வெவ்வேறாய் பெருநாள் கொண்டாடி வந்தாலும் மலேசியர்கள் மட்டும் உலகில் மாறுபட்டவர்கள் என்பது உலகறிந்த செய்தி.
இந்தியர், சீனர், எவரென்றாலும் சிந்திப்ப தெல்லாம் சமமெனத் தானே!
இது ஒரு கவிதையின் வரி. இப்படித்தான் மலேசியர்கள் பெருநாளைக் கொண்டாடி வருகிறார்கள். மதம் சார்ந்து பெருநாள் அமைந்தாலும் தேசியமாகவே நாடும் அரசும் அங்கீகரித்திருக்கிறது.
இது தெரிந்த செய்திதான் என்பதும் புரிகிறது. ஆனாலும், இவ்வாண்டு நோன்புப் பெருநாள் அப்படி அமைந்திருக்காது என்பதுதான் அனைவருக்குமான வருத்தம்.
பெருநாள் அதன் போக்கில் வரும். அதன் போக்கில் செல்லும். முன்பெல்லாம் ஒருநாள் கூத்து என்பாரும் உண்டு, அவர்களுக்குப் பெருநாள் தத்துவம் தெரியாது என்பதுதான் பொருள். பெருநாளுக்கென்று தனி பரிணாமத் தத்துவங்கள் இருக்கின்றன. அது, மக்களில் சிறந்த மக்கள் என்பதன் பொருள் அடங்கியிருக்கும். மக்களைப் பாரபட்சமின்றி நேசிப்பது, எப்படி? அவர்களின் துன்பங்களில் பங்கேற்பது முதல் உலகப் பொது நன்மைளில் பகிர்ந்துகொள்வது என்றெல்லாம் அதில் இருக்கும்.
ஆனால், இன்று துன்பத்தின் சாயம் அதில் மிகுதியாய்ப் பூசப்பட்டிருக்கிறது. அந்த சாயத்தின் பெயர் கொரோனா. அடக்கமாக கோவிட் -19 என்றும் அழகிய பெயர்ச்சூட்டும் நடந்திருக்கிறது.
இதனாலென்ன என்று எவரும் கேள்வி எழுப்பிவிட முடியாது. இதனாலென்ன என்பதுதான் பெரிய கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.
இதனாலென்ன?
இது மலேசியர்களுக்கான தார்மீகக் கேள்வி..
கொரோனா நிறைய கற்றுக் கொடுத்திருக்கிறது. ஆசிரியர்கள், குருமார்கள், மதத்தலைவர்கள், மகான்கள், சித்தர்கள் என்று எந்தரப்பினரும் சொல்லித் தராதவற்றைச் சொல்லிக்கொடுக்கும் உலகப்பேராசிரியராக பாடம் கற்றுக் கொடுத்துக்கொண்டிருக்கிறது..
மனிதரில் எவரும் உயர்ந்தவரில்லை. தாழ்ந்தவரெல்லாம் தாழ்ந்தவரில்லை என்ற தத்துவத்தில் பாடம் புகட்டப்படுகிறது.
உலக மக்களில் நிலமும் நிறமும் பிரிந்திருக்கிறது. மனிதம் மாறவே இல்லை. அதன் உணமைத்ததுவத்தில் மனிதர்கள் சோதனை எழுத்திக்கொண்டிருக்கின்றனர்.
இந்த சோதனையின் மிகப் பெரும்பானமை மக்கள் மரணம் நோக்கியிருக்கின்றனர்.
பிரச்சினை ஏற்படும்போது மீள்வது எப்படி என்பதை கொரோனாபோல் எவரும் கற்றுத்தரமுடியாது என்பதற்கொப்ப, மதனகளுக்கு அப்பால் மனிதம் உணர்த்திய பெருமை கொரோனாவுக்கு உண்டு.
பழைய பாடல் புதிய பல்லவியின் உலக ராகம் இசைக்கப்பட்டுகொண்டிருக்கிறது. இதன் தலைப்பு கொரோனா.