பெருநாள் என்பதன் நோக்கமே உறவினர்களை வரவழைப்பதும், நண்பர்களை வரவேற்பதும் விருந்து வைத்து மகிழ்வதும் குழந்தைளுடன் குதூகளித்திருப்பதும் கலாச்சாரமாக இருந்துவருகிறது.
ஆனால், இவ்வாண்டு நோன்புப் பெருநாள் எதிர்மறையாக இருக்கிறது. விருந்தினர்களை, நண்பர்களை வரவேண்டாம் என்று சொல்ல வைத்திருக்கிறது கொரோனா தொற்று.
இன்றைய நிலையில் நாடும் மக்களும் கொரோனா பிடியில் சிக்கிக் கொண்டிருக்கின்றனர். உள்ளபடியே கொரோனா தொற்று மக்களைக் கடத்தி வைத்திருக்கிறது வைத்திருக்கிறது. அதன் ஆட்சிக் காலத்தை அதன் வழியில் சென்றே சமாளிக்கவும் அதன் ஆயுளைக் குறைக்கவும் வேண்டும் என்று சுகாதரதுறை பல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கொரோனாவின் ஆயுளைக் குறைக்க வேண்டுமானால் திறந்த இல்ல உபசரிப்பு சரியான தீர்வாக இருக்காது. அதுமட்டுமல்ல, விருந்தினர்கள் வராமல் இருப்பதே விருந்தினர் செய்யும் நன்மையாகும்.
இம்முறை கொண்டாடப்படும் பெருநாள் நேருக்கு மாறாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. மக்கள் இதற்கேற்ப தங்களை மாற்றம் செய்துகொள்ளவேண்டும்.
மாறாவிட்டால் மாற்றங்கள் விவரீதமாக மாறிவிடும் என்பதில் ஐயமுமில்லை. இந்த மாற்றங்களால் தீமைகளே அதிகமாகும். என்பதால் இப்பெருநாள் முற்றிலும் மாறுபட்டதாக இருக்க வேண்டும்.
குறைந்த எண்ணிக்கையிலானவர்களே வரவேண்டும் என்பதால் கூடுதலானவர்களுக்கு இடம் இல்லை என்பதை நினைவில் கொள்ளல் சிறப்பு.