ஆயர் பானாஸ் பிபிஆர் அடுக்ககத்தில் கூரைகள் பறந்தன கார்கள் சேதம் அடைந்தன

 

பலத்த காற்றுடன் கூடிய கனத்த மழை பெய்ததால் இங்குள்ள ஸ்தாப்பாக் ஆயர் பானாஸ் பிபிஆர் அடுக்ககத்தின் கூரைகள் பறந்து கீழே விழுந்ததில் பல கார்கள் சேதம் அடைந்தன.

மாலை 6 மணியளவில் பெய்த கனத்த மழையால் அந்த அடுக்ககத்தின் கூரைகள் மேல் இருந்து கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் மீது விழுந்து சேதப்படுத்தியது. கார்கள் மட்டுமின்றி மோட்டார் சைக்கிள்கள், வீடுகளில் பொருத்தப்பட்டிருந்த குளிருட்டி ஆகியவற்றையும் சேதப்படுத்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here